பாரதிராஜா பிறந்த நாள்

திரைப்பட இயக்குநர் பாரதிராஜா தேனி – அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்தவர். இவர் அரங்கத்தினுள் அடங்கிக் கிடந்த சினிமாவை வெளிப்புற படப்பிடிப்பு பகுதிகளுக்கு கொண்டுச் சென்றவர். அவர் பெரும்பாலும் உணர்வுப்பூர்வமான நாட்டுப்புறக் கதைகளை படமாக ஆக்கியவர். இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணைந்து தமிழ் ரசிகர்களால் மறக்க முடியாத இனிய பாடல்களைக் கிடைக்கச் செய்தவர். அவரால் ஏராளமான புதுமுக நடிகர்கள், நடிகைகள் தமிழ் திரைப்பட உலகில் உருவாக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறப்பு நாள்

தென் கொரியா – அரசியலமைப்பு நாள்

பிற நிகழ்வுகள்

1203 – நான்காம் சிலுவைப் படைகள் கான்ஸ்டாண்டின்நோபல் நகரைத் தாக்கிக் கைப்பற்றினர். பைசண்டைன் பேரரசர் மூன்றாம் அலெக்சியஸ் ஆஞ்செலஸ் தலைநகரை விட்டுத் தப்பியோடினார்.
1755 – கிழக்கிந்தியக் கம்பெனிக்குச் சொந்தமான டொடிங்டன் என்ற கப்பல் இங்கிலாந்தில் இருந்து திரும்பும் வழியில் தாண்டதில் பல பெறுமதியான தங்க நாணயங்கள் கடலில் மூழ்கின.
1762 – உருசியாவின் மூன்றாம் பீட்டர் கொல்லப்பட்டதை அடுத்து அவரது மனைவி இரண்டாம் கேத்தரீன் அரசியானார்.
1791 – பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிசில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தின் போது பெண்கள், குழந்தைகள் உட்பட 50 பேர்  கொல்லப்பட்டனர்.
1815 – பிரான்சில் நெப்போலியன் போனபார்ட் பிரித்தானியர்களிடம் சரணடைந்தார்.
1816 – பிரெஞ்சு பயணிகள் கப்பல் செனெகல்லுக்கு அருகில் மூழ்கியதில் 140 பேர் கொல்லப்பட்டனர்.
1841 – முதலாவது பஞ்ச் இதழ் லண்டனில் வெளியிடப்பட்டது.
1856 – பென்சில்வேனியாவில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 60 பேர் கொல்லப்பட்டனர்.
1918 – போல்ஷெவிக் கட்சியின் உத்தரவின் பேரில் ரஷ்யாவின் இரண்டாம் நிக்கலாசும் அவனது குடும்பத்தினரும் கொல்லப்பட்டனர்.
1918 – டைட்டானிக் கப்பலில் இருந்து 705 பேரைக் காப்பாற்றிய “கர்பாத்தியா” என்ற கப்பல் அயர்லாந்துக்கருகில் மூழ்கியதில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
1936 – ஸ்பானிய உள்நாட்டுப் போர்: ஸ்பெயினில் அண்மையில் அமைக்கப்பட்ட இடதுசாரி அரசுக்கெதிராக ராணுவக் கிளர்ச்சி ஆரம்பமாகியது.

1941 –திரைப்பட இயக்குநர் பாரதிராஜா பிறந்த நாள்.
1944 – இரண்டாம் உலகப் போர்: கலிபோர்னியாவில் ஆயுதங்கள் ஏற்றிச் சென்ற இரண்டு கப்பல்கள் வெடித்ததில் 320 பேர் கொல்லப்பட்டனர்.
1944 – இரண்டாம் உலகப் போர்: முதற் தடவையாக நேப்பாம் குண்டுகள் அமெரிக்காவினால் பிரான்ஸ் மீது போடப்பட்டது.
1945 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்காவின் ஹாரி எஸ். ட்ரூமன், பிரித்தானியாவின் வின்ஸ்டன் சேர்ச்சில், சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் ஆகியோர் உலகப்போர் தொடர்பான தமது கடைசி உச்சி மாநாட்டை ஜெர்மனியின் பொட்ஸ்டாம் நகரில் ஆரம்பித்தனர்.
1955 – கலிபோர்னியாவில் டிஸ்னிலாண்ட்டின் ஆரம்ப நிகழ்வுகள் தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டது.
1967 – நாசாவின் சேர்வயர் 4 ஆளில்லா விண்கலம் சந்திரனில் “சைனஸ் மெடை” என்ற இடத்தில் மோதியது.
1968 – ஈராக்கில் இடம்பெற்ற புரட்சியில் அதிபர் அப்துல் ரகுமான் ஆரிஃப் பதவியில் இருந்து அகற்றப்பட்டு அகமது ஹசன் அல்-பாக்கர் அதிபரானார்.
1973 – ஆப்கானிஸ்தான் அரசர் முகமது சாகிர் ஷா கண் சிகிச்சைக்காக இத்தாலி சென்றிருந்த போது பதவியில் இருந்து அகற்றப்பட்டு அவரது உறவினர் முகமது தாவுத் கான் மன்னரானார்.
1975 – அமெரிக்காவின் அப்பல்லோ விண்கலமும் சோவியத்தின் சோயுஸ் விண்கலமும் விண்வெளியில் ஒன்றாக இணைந்தன. இரண்டு நாடுகளின் விண்கலங்கள் ஒன்றாக இணைந்தது இதுவே முதற் தடவை.
1976 – கனடாவின் மொண்ட்ரியால் நகரில் கோடை கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆரம்பமாயின. நியூசிலாந்து அணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து 25 ஆபிரிக்க நாடுகள் இப்போட்டிகளைப் புறக்கணித்தன.
1976 – கிழக்குத் தீமோர் இந்தோனீசியாவுடன் இணைக்கப்பட்டது.
1979 – நிக்கராகுவா அதிபர் அனஸ்தாசியோ சமோசா டெபாயில் பதவியில் இருந்து விலகி மியாமிக்குத் தப்பி ஓடினார்.
1981 – மிசூரியில் கன்சாஸ் நகரில் நடைப் பாலம் ஒன்று இடிந்ததில் 114 பேர் கொல்லப்பட்டனர்.
1994 – பிரேசில் இத்தாலியை 3-2 என்ற பெனால்டி அடிப்படையில் வென்று உலக உதைபந்து உலகக்கிண்ணத்தை வென்றது.
1996 – நியூயார்க்கில் லோங் தீவில் பாரிஸ் சென்றுகொண்டிருந்த போயிங் 747 TWA விமானம் வெடித்துச் சிதறியதில் 230 பேர் கொல்லப்பட்டனர்.
1998 – பப்புவா நியூ கினியில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக 10 கிராமங்கள் அழிந்தன. 3,183 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
1998 – பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் ஒன்றை நிரந்தரமாக அமைப்பதற்கான உடன்பாடு ரோம் நகரில் எட்டப்பட்டது.
2006 – இந்தோனேசியா, ஜாவாவில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக 100 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.
2006 – இந்தியா சத்தீஸ்கர் மாநிலத்தில் தந்தேவாடா மாவட்டத்தில் எர்ராபோரே நிவாரண முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர்.
2007 – பிரேசிலில் விமானம் ஒன்று தரையில் மோதியதில் 199 பேர் கொல்லப்பட்டனர்.
2014 – ஆம்ஸ்டர்டாமிலிருந்து கோலாலம்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த மலேசியா ஏர்லைன்சு விமானம் 17 உக்ரைனின் தோனெத்ஸ்க்கில் ஏவுகணைத் தாக்குதல் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் அதில் பயணம் செய்த அனைத்து 298 பேரும் கொல்லப்பட்டனர்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.