பிபிசி முதல் தொலைக்காட்சி செய்தியை ஒளிபரப்பிய நாள்

சிறப்பு நாள்

வெனிசுலா விடுதலை நாள்

அல்ஜீரியா விடுதலை நாள்

கேப் வர்டி விடுதலை நாள்

பிற நிகழ்வுகள்

328 – ருமேனியாவுக்கும், பல்கேரியாவுக்கும் இடையில் தன்யூப் ஆற்றின் மீது பாலம் கட்டப்பட்டது.

1594 – தந்துறைப் போர்: போர்த்துக்கீசியப் படையினர் பேரோ லொபேஸ் டி சூசா தலைமையில் கண்டி ராச்சியம் மீது திடீர் தாக்குதலை நடத்தி தோல்வி அடைந்தனர்.

1610  நியுபவுண்ட்லாந்து தீவை நோக்கிய தனது பயணத்தை ஜோன் கை பிரிஸ்டலில் இருந்து 39 குடியேறியோருடன் கடல் பயணத்தைத் தொடங்கினார்.

1687 – ஐசக் நியூட்டன் தனது புகழ்பெற்ற பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்கா நூலை வெளியிட்டார்.

1770- ருஷியப் பேரரசுக்கும், உதுமானியப் பேரரசுக்கும் இடையில் செஸ்மா என்ற இடத்தில் போர் இடம்பெற்றது.

1809 – நெப்போலியப் போர்களின் மிகப் பெரும் போர் பிரான்சுக்கும், ஆஸ்திரியப் பேரரசுக்கும் இடையில் வக்ரம் என்ற இடத்தில் இடம்பெற்றது.

1811 – வெனின்சுலா எசுப்பானியாவிடம் இருந்து விடுதலை அறிவித்தது.

1884 – ஜெர்மனி காமரூனை ஆக்கிரமித்தது.

1900 – ஆஸ்திரேலியப் பொதுநலவாய சட்டம் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் ஏற்றப்பட்டது.

1940 – 2-ஆம் உலகப் போர் ஐக்கிய ராச்சியமும் பிரான்சும், தூதரக உறவைத் துண்டித்தன.

1941 – 2-ஆம் உலகப் போர் பர்பரோசா நடவடிக்கை: ஜெர்மனிப் படையினர் தினேப்பர் ஆற்றை அடைந்தனர்.

1943 – இரண்டாம் உலகப் போர் – ஜெர்மானியப் படைகள் சோவியத் ஒன்றியம் மீது கூர்ஸ்க் மீது தாக்குதலை தொடங்கின.

1945 – இரண்டாம் உலகப் போர் – பிலிப்பைன்ஸின் விடுதலை அறிவிக்கப்பட்டது.

1950 – கொரியப் போர் – அமெரிக்கப் படைகளுக்கும், வடகொரியாப் படைகளுக்கும் இடையில் முதலாவது மோதல் தொடங்கியது.

1950 – யூதர்கள் அனைவரும் இஸ்ரேலில் குடியேற அனுமதி அளிக்கும் சட்டம் இஸ்ரேலில் கொண்டு வரப்பட்டது.

1954 – பிபிசி தனது முதல் தொலைக்காட்சி செய்தியை ஒளிபரப்பியது.

1962 – பிரான்ஸிடம் இருந்து அல்ஜீரியா விடுதலை பெற்றது.

1975 – விம்பிள்டன் கோப்பையை வென்ற முதலாவது கறுப்பினத்தவர் என்ற பெருமையை ஆர்தர் ஆஷ் பெற்றார்.

1977 – பாகிஸ்தானில் இடம்பெற்ற ராணுவப் புரட்சியில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதலாவது பிரதமர் சுல்பிக்கார் அலி புட்டோ பதவி இழந்தார்.

1996 – குளோனிங் முறையில் முதலாவது பாலூட்டி, டோலி என்ற ஆடு ஸ்காட்லாந்தில் பிறந்தது.

1998 – செவ்வாய் கோளுக்கு தனது முதலாவது விண்கலத்தை ஜப்பான் ஏவியது.

2009 – சீனாவின் சிஞ்சியாங் மாகாணத் தலைநகர் உருமுச்சியில் கலவரங்கள் வெடித்தன.

2016 – யூனோ விண்கலம் வியாழன் கோளை அடைந்து தனது 20 மாத ஆய்வை தொடங்கியது.

சிறப்பு நாள்

வெனிசுலா விடுதலை நாள்

அல்ஜீரியா விடுதலை நாள்

கேப் வர்டி விடுதலை நாள்

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.