அழகுமுத்து கோன் குருபூஜை விழா
சிவகங்கை: தென்னிந்தியாவில் ஆங்கில ஆட்சிக்கு எதிரான முதல் சுதந்திர போராளியாக இருந்தவர் மாவீரன் அழகுமுத்துக் கோன். இவரது 263-ஆவது குருபூஜை விழா தமிழகத்தில் பல இடங்களில் நடத்தப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக வீரன் அழகுமுத்துக்கோன் குருபூஜை விழா
சிவகங்கை மாவட்டம் காளையார்கோயிலில் நடைபெற்றது. இதில் கதர் மற்றும் கிராம தொழில் வாரிய துறை அமைச்சர் பாஸ்கரன் பங்கேற்று, வீரன் அழகுமுத்துக்கோன் புகைப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்டம் ஆட்சியர் ஜெயகாந்தன், மானாமதுரை சட்டப் பேரவை உறுப்பினர் நாகராஜன், அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
You must log in to post a comment.