அழகர் கோயிலில் ஆடித் திருவிழா தொடக்கம்
அழகர்கோவில், ஜூலை 26: அழகர்கோவில் ஆடி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பிரசித்தி பெற்ற அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் தேரோட்ட திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டும் ஞாயிற்றுக்கிழமை காலையில் மேலதாளம் முழங்க கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. இதில் அலங்கரிக்கப்பட்ட தங்க கொடிமரத்தை சுற்றிலும் நாணல் புல், மாவிலைகள், பூ மாலைகள் இணைக்கப்பட்டு கருடன் உருவம் பொறித்த கொடி ஏற்றப்பட்டது.
இதைதொடர்ந்து நூபுற கங்கை தீர்த்தம் கொண்டு விசேஷ பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தது. இதில் உற்சவர் ஸ்ரீதேவி பூமிதேவி சமேத கள்ளழகர் என்கிற சுந்தரராச பெருமாளுக்கு விசேஷ பூஜைகள் தீபாரதனைகள் நடந்தது. இரவு அன்னவாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடந்தது.
இதைத் தொடர்ந்து திங்கள்கிழமை காலையில் தங்க பல்லக்கு உற்சவமும் இரவி சிம்ம வாகனத்தில் சுவாமி புறப்படும் நடைபெறும். 28-ஆம் தேதி வழக்கம்போல் நிகழ்ச்சியும் இரவு அனுமார் வாகனத்தில் புறப்பாடும், 29-ஆம் தேதி இரவு கருட வாகனத்தில் சுவாமி புறப்பாடும், 30-ஆம் தேதி இரவு சேஷ வாகனத்திலும், 31ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு யானை வாகனத்திலும் சுவாமி புறப்பாடு நடைபெறும்.
ஆகஸ்ட் 1-ஆம் தேதி இரவு புஷ்ப சப்பரமும், 2-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆடி 18-ஆம் பெருக்கு விழாவும், இரவு குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடும், 3-ஆம் தேதி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்ட விழாவும், இரவு புஷ்பப் பல்லக்கும், 4-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 10-ஆம் திருநாள் தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
ஆடி பெருந்திருவிழாவிற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாச்சலம், நிர்வாக அதிகாரி அனிதா மற்றும் கண்காணிப்பாளர்கள், திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். நடைபெற்று வரும் திருவிழாவில் அரசு ஊரடங்கு தடை காலம் இருப்பதால் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை.
You must log in to post a comment.