அயோத்தி ராமர் கோயிலின் மாதிரி புகைப்படம் வெளியீடு

அயோத்தி: உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் கட்டப்படவுள்ள பிரம்மாண்ட கோயிலின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இக்கோயிலின் பூமி பூஜை, அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெறுகிறது.

ராமர் கோயிலுக்கான அடிக்கல்லை பாரத பிரதமர் நரேந்திர மோடி நாட்டுகிறார். விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர்கள், கோயில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளவுள்ள ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.

அயோத்தியில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அயோத்தி முழுவதும் தீவிர கண்காணிப்பு வளையத்தில் உள்ளது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.