ஆவின் பால் லாரி கவிழ்ந்து விபத்து: ஓட்டுநர் பலி
மதுரை: ஆவின் பால் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதன் ஓட்டுநர் உயிரிழந்தார்.
உசிலம்பட்டியில் இருந்து மதுரை ஆவினுக்கு பால் ஏற்றி சென்றுகொண்டிருந்த லாரி எல்லிஸ் நகர் மேம்பாலம் பெரியார் பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தது. ஆவின் நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படும் இந்த வாகனம் மதுரை ரயில்வே நிலையம் மேற்கு நுழைவாயில் அருகே செல்லும்போது நிலைதடுமாறி பாலத்தில் இருந்து கீழே விழுந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த மதுரை டவுன் தீயணைப்புத் துறையினர் இடிபாடுகளில் சிக்கிய ஓட்டுநரை மீட்டனர். இருப்பினும் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். இவர் மதுரை மாவட்டம், பேரையூரைச் சேர்ந்த முனியாண்டி என விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்து குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
You must log in to post a comment.