அவனியாபுரத்தில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

அவனியாபுரம், ஜூன் 29: பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து மதுரை, அவனியாபுரத்தில் காங்கிரஸ் கட்சியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் கடும் கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை மாவட்டம்,  திருப்பரங்குன்றம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அவனியாபுரத்தில் காங்கிரஸ் கட்சி சார்பாக அவனியாபுரம் தொகுதி தலைவர் ராமசாமி தலைமையில் மத்திய அரசுக்கு எதிராக பெட்ரோல் டீசல் விலை உயர்வை திரும்ப பெற கோரியும் கண்டன கோஷங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஜோதி ராமலிங்கம் கஜேந்திரன் முனியாண்டி குமரய்யா உள்ளிட்டகாங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.