அர்ஜென்டைனா – விடுதலை நாள்

சிறப்பு நாள்

அர்ஜென்டைனா – விடுதலை நாள்

அர்ஜென்டைனா தென்அமெரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இந்நாட்டின் அரசு ஏற்பு பெற்ற பெயர் ரெப்பு’ப்லிக்கா அர்ஃகென்ந்தீனா . இதன் மேற்கிலும், தெற்கிலும் சிலியும், வடக்கில் பொலீவியாவும், பராகுவேயும், வடகிழக்கில் பிரேசில், உருகுவேயும் எல்லைகளாக உள்ளன. இது, 23 மாகாணங்களையும்; தன்னாட்சிப் பகுதியும், தலைநகரமுமான பியூனஸ் அயர்ஸ் நகரத்தையும் உள்ளடக்கிய கூட்டாட்சி அமைப்புக் கொண்டது. 

பரப்பளவில் இது தென் அமெரிக்காவில் இரண்டாவது பெரியதும் உலகில் எட்டாவது பெரிய நாடும் ஆகும். அர்ஜென்டைனா ஐக்கிய நாடுகள் அவை. “மெர்கோசுர்” எனப்படும் தெற்கத்திய பொதுச் சந்தையாகும். தென்னமெரிக்க நாடுகள் ஒன்றியம், ஐபீரோ அமெரிக்க நாடுகள் அமைப்பு, உலக வங்கிக் குழு, உலக வணிக அமைப்பு ஆகியவற்றின் தொடக்ககால உறுப்பு நாடுகளுள் இது ஒன்று. அத்துடன் ஜி-15 நாடுகள்,  20 முக்கிய பொருளாதார குழு நாடுகள் ஆகியவற்றிலும் இது இடம்பெற்றுள்ளது. 1816-இல் ஸ்பெயினிடமிருந்து விடுதலை பெற்றது.

பிற நிகழ்வுகள்

455 – அவிட்டஸ் மேற்கு ரோமப் பேரரசின் மன்னரானார்.
1357 – புனித ரோமப் பேரரசர் நான்காம் சார்லஸ் பிராகா நகரத்தில் சார்லஸ் பாலத்திற்கு அடித்தளம் நாட்டினார்.
1755 – பென்சில்வேனியாவில் பிரெஞ்சு மற்றும் குடியேற்ற துணை இராணுவக் குழு பிரித்தானியப் படைகளைத் தோற்கடித்தன.
1790 – பால்ட்டிக் கடலில் இடம்பெற்ற மோதலில் சுவீடனின் கடற்படையினர் ரஷ்யக் கப்பல்களை பெரும் எண்ணிக்கையில் கைப்பற்றினர்.
1810 – ஒல்லாந்து நாட்டை நெப்போலியன் தனது பிரெஞ்சு இராச்சியத்துடன் இணைத்துக் கொண்டார்.
1816 – அர்ஜென்டைனா ஸ்பெயினிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1863 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஹட்சன் துறைமுகம் மீதான தாக்குதல் முடிவுக்கு வந்தது.
1868 – அனைத்து ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கும் முழுக் குடியுரிமை வழங்கும் சட்ட மூலம் ஐக்கிய அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்டது.
1900 – ஆஸ்திரேலிய கண்டத்தில் தனித்தனியே குடியேற்ற நாடுகளாக இருந்த மாநிலங்கள் ஆஸ்திரேலியப் பொதுநலவாயத்தின் கீழ் ஒன்றிணைக்க விக்டோரியா மகாராணி ஒப்புதல் அளித்தார்.

1930 – தமிழ் திரைப்பட இயக்குநர் – கே. பாலச்சந்தர் பிறந்த நாள்.
1943 – இரண்டாம் உலகப் போர்: நேச நாடுகள் சிசிலி மீதான தாக்குதலை ஆரம்பித்தன.
1948 – பாகிஸ்தான் தனது முதலாவது அஞ்சல் தலையை வெளியிட்டது.
1956 – யாழ்ப்பாணத்தில் நல்லூர் கந்தசுவாமி கோயில், வண்ணார்பண்ணை சிவன் கோயில், பெருமாள் கோயில் ஆகியன தாழ்த்தப்பட்டோரின் வழிபாட்டுக்காகத் திறந்து விடப்பட்டன
1982 – ஐக்கிய அமெரிக்க போயிங் விமானம் லூசியானாவில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த 146 பேரும் தரையில் இருந்த 8 பேரும் கொல்லப்பட்டனர்.
1991 – 30 ஆண்டுகளின் பின்னர் தென்னாபிரிக்கா ஒலிம்பிக் விளையாட்டுக்களில் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டது.

1995 – யாழ்ப்பாணத்தில் நவாலி பேதுருவானவர் தேவாலயம் மீது இலங்கை விமானப் படையினரால் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 141 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
2002 – ஆப்பிரிக்க ஒன்றியம் அடிஸ் அபாபாவில் அமைக்கப்பட்டது. தென்னாப்பிரிக்க அதிபர் தாபோ உம்பெக்கி இவ்வமைப்பின் முதலாவது தலைவரானார்.
2006 – சைபீரியாவில் 200 பேரை ஏற்றிச் சென்ற பயணிகள் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 122 பேர் கொல்லப்பட்டனர்.
2006 – உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இத்தாலி பிரான்சை வென்று நான்காவது தடவையாக உலகக் கோப்பையை தனதாக்கிக் கொண்டது.
2006 – அக்னி III ஏவுகணை ஒடிசாவில் பரிசோதிக்கப்பட்டது. அதன் இரண்டாவது அடுக்கு இயங்காமல் போனதால் குறுகிய தூரத்தையே சென்றடைந்தது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.