கரோனா தடுப்புப் பணி ஆர்வலர்களுக்கு ஆப்பிள் பழங்கள்

காட்பாடி: இந்தியன் ரெட்கிராஸ் சார்பில் காட்பாடியில் கரோனா நோய்த் தடுப்பு முன்னணி ஊழியர்களுக்கும் தன்னார்வ தொண்டர்களுக்கும் ஆப்பி்ள் பழங்களும், குளிர்பான பாக்கெட்டுகளும் வழங்கப்பட்டன.
காட்பாடி வட்ட ரெட்கிராஸ் சார்பில் இந்த ஆப்பிள் குளிர்பான பாக்கெட்டுகளை வட்டாட்சியர் ஆர்.பாலமுருகன் வழங்கினார்.
இந்த நிகழ்வுக்கு துணைத்தலைவர் ஆர்.சீனிவாசன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக காட்பாடி ரயில் நிலைய மேலாளர் ஆர்.ரவீந்தரநாத் கலந்து கொண்டார். செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் வரவேற்று பேசினார். பொருளாளர் வி.பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கரோனா நோய் தடுப்பு பணியில் உள்ள முன்னணி ஊழியர்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்களுக்கு ஆப்பிள், குளிர்பான பாக்கெட்டுகளை வட்டாட்சியர் ஆர்.பாலமுருகன் கிராம நிர்வாக அலுவலர் கோபியிடம் வழங்கி தொடங்கி வைத்தார்.
ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் கு.ருத்ராரெட்டி, காட்பாடி வட்ட மண்டல துணை வட்டாட்சியர் முரளிதரன், வருவாய் ஆய்வாளர் சிவக்குமார், ரயில்வே காவல் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன், ரெட்கிராஸ் மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் எஸ்.எஸ்.சிவவடிவு, ஜி.செல்வம், வாழ்நாள் உறுப்பினர்கள் ஏ.ஆனந்தகுமார், வி.காந்திலால்படேல், ஜெ.கஜேந்திரன், ஆறுமுகம், தன்னார்வ தொண்டர்கள் செ.ஜ.சோமசுந்தரம், எஸ்.மோதகப்பிரியன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்தியன் ரெட்கிராஸ் தமிழக கிளையின் தலைவர் ஹரிஷ் எல்.மேத்தா, மாநில பொருளாளர் மற்றும் மாவட்ட செயலாளர் சி.இந்தர்நாத் ஆகியோரின் ஆலோசனையின் படி ஆப்பிள், குளிர்பானங்கள் வழங்கப்பட்டன.
Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.