அசத்தலான ஆண்ட்ராய்டு-11 பீட்டா பதிப்பு வெளியீடு

ஆண்டுதோறும் கூகுள் நிறுவனம் நடத்தும் வருடாந்திர கூகுள் மேம்பாட்டாளர் மாநாட்டில் புதிய ஆண்ட்ராய்டு பதிப்புகள், கூகுல் குரோம் உள்ளிட்ட புதிய அறிவிப்புகள் வெளியாவது வழக்கம். இந்த ஆண்டும் கூகுள் அத்தகைய அசத்தலான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தற்போது கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு 11-ன் பீட்டா பதிப்பு பொதுமக்களின் பயன்பாட்டுக்கும், டெவலப்பர்கள் பயன்பாட்டுக்கும் வெளியிடப்பட்டுள்ளது.

கூகுள் நிறுவனம் இறுதி செய்யப்பட்ட ஆண்ட்ராய்டு பதிப்பை வெளியிடும் முன் பீட்டா பதிப்பை இலவசமாக வழங்கும். இதை பொதுமக்களும், டெவலப்பர்களும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி தங்களின் அனுபவத்தைத் தெரிவிக்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

பயன்பாட்டில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் அவை சரிசெய்யப்பட்டு இறுதி பதிப்பு வெளியிடப்படும்.

அவ்வகையில்தான் தற்போது ஆண்ட்ராய்டு-11 பீட்டா பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்ட்ராய்டு 11 பீட்டா பதிப்பை இணையத்தில் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

தற்போது பிக்சல் 2, 3, 3ஏ, 4 வகை செல்போன்களில் மட்டும் ஆண்ட்ராய்டு 11 பீட்டா பதிப்பைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும்.

ஆண்ட்ராய்டு 11 பதிப்பு ஆண்ட்ராய்டு 10-இன் மேம்படுத்தப்பட்ட பதிப்பாகவும், ஸ்க்ரீன் ரெக்கார்டிங், நோட்டிபிகேஷனில் தேவையின் அடிப்படையில் மாற்றம் செய்யும் வசதி, உரையாடல்களை எளிதில் மேற்கொள்ளும் வகையிலான புதிய மாற்றம், கூகுள் பே வசதி ஆகியவை இந்த மேம்படுத்தப்பட்ட பதிப்பின் முக்கிய அம்சங்களாக எதிர்பார்க்கப்படுகிறது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.