ஆந்திராவில் பலர் உயிரிழந்த சம்பவம்: தமிழக முதல்வர் இரங்கல்


சென்னை: ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் விஷவாயுக் கசிந்து பலியானோர் குடும்பங்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம், விசாகபட்டினம் அருகே உள்ள ஆர்.ஆர்.வெங்கடபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் ரசாயனத் தொழிற்சாலையில் விஷவாயு கசிவு ஏற்பட்டதால் பலர் உயிரிழந்தனர் என்ற செய்தி அறிந்து துயரம் அடைந்துள்ளதாக முதல்வர் பழனிசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாகவும் இவ்விபத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அனைவரும் விரைவில் பூரண குணமடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.