அமெரிக்க விமானத்தை ரஷிய விமானங்கள் இடைமறிப்பு: அமெரிக்க கடற்படை தகவல்
வாஷிங்டன்: அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை இரு ரஷிய ஜெட் விமானங்கள் இடைமறித்ததாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.
அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான பி -8 ஏ ஆளில்லா விமானம் கிழக்கு மத்தியதரைக் கடலில் செவ்வாய்க்கிழமை சர்வதேச கடல் வழியாக பறந்து கொண்டிருந்தபோது இரண்டு ரஷிய சு -35 விமானங்கள் சுமார் 65 நிமிஷம் அமெரிக்க விமானத்தை இடைமறித்து முறைகேடான முறையில் தடுத்து நிறுத்தின என்று அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.
ரஷிய விமானிகள் பி -8 ஏவின் இரு பக்கத்திலும் ஒரே நேரத்தில் நெருக்கமான நிலையில் பறந்தன. ரஷிய சு -35 விமானிகளின் நடவடிக்கைகள் வான்வெளி மற்றும் சர்வதேச விமான விதிகளுக்கு முரண்பட்டதாக இருந்தது என்றும் அமெரிக்க கடற்படை கூறியுள்ளது.
You must log in to post a comment.