அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் நிலநடுக்கம்
வாஷிங்டன்: அமெரிக்க நாட்டின் அலாஸ்கா மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8-ஆகப் பதிவாகியுள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்கப் புவியியல் மையம் தெரிவித்துள்ள விவரம்:
அலாஸ்கா மாகாணத்தில் இருந்து சுமார் 105 கி.மீ. தொலைவில் உள்ள பெரிவில்லேவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆகப் பதிவாகியிருக்கிறது. இதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. இருப்பினும் வடக்கு அமெரிக்காவில் சுனாமி பாதிப்பு ஏதும் இல்லை. நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இன்னும் முழுமையான விவரங்கள் கிடைக்கவில்லை எனத் தெரிவித்துள்ளது. கடந்த 2018 நவம்பரில் அலாஸ்காவில் 7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சாலைகள், பாலங்கள் மிகுந்த சேதத்தைச் சந்தித்தன
You must log in to post a comment.