சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி மறைவு

சென்னை: சத்தீஸ்கர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி (74) காலமானார்.
ராய்ப்பூர் ஐஐடியில் பேராசிரியராகவும், 1980-களில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாகவும் பணிபுரிந்தவர் அஜித் ஜோகி. ராஜீவ் காந்தியால் அரசியலுக்கு கொண்டுவரப்பட்ட அவர் காங்கிரஸ் கட்சியின் பழங்குடி இன தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து கடந்த 2000-ஆவது ஆண்டு சத்தீஸ்கர் மாநிலம் உருவாக்கப்பட்டது. அந்த மாநில அரசியலில் முக்கியப் பங்கு வகித்து வந்த ஜோகி, சத்தீஸ்கர் முதல்வராக 2000 முதல் 2003-ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார்.
காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ, எம்.பி.யாகவும், மாநிலங்களவை எம்.பியாகவும் பதவி வகித்தவர். 2016-இல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர் (ஜெ) தனி கட்சியையும் அஜித் ஜோகி தொடங்கினார்.
அண்மையில் உடல்நலக் குறைவால் அவர் ராய்ப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் ஜோகி உயிர் வெள்ளிக்கிழமை பிரிந்ததாக அவரது மகன் அமித் ஜோகி டுவிட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார்.
அஜித் ஜோகியின் மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.