வயதானோரைப் பாதுகாப்பாக வைக்க வேண்டும்

காவல்துறை அறிவுறுத்தல்

மதுரை பொதுமக்கள் அனைவரும் வயதானவர்கள் மீது அதிக கவனம் செலுத்தி வீட்டில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்று மதுரை மாநகர காவல் துறை அறிவுறுத்தி வருகிறது.

வயதானவர்களை கொரோனா வைரஸ் தாக்குவதற்கு அதிகமாக வாய்ப்புகள் உள்ளதால் அவர்களை வீட்டில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்று காவல்துறையினர் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். அத்துடன் தல்லாகுளம் காவல் ஆய்வாளர் மலைச்சாமி, வெளி இடங்களுக்கு வரும் வயதானவர்களுக்கு முகக் கவசங்களை வழங்கி கொரோனா தொற்றிலுருந்து பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுரை வழங்கி வருகிறார்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.