அதிமுக-பாஜக கூட்டணி: சட்டப் பேரவை தேர்தல் அறிவிப்புக்கு பிறகு தொகுதி பங்கீடு?

சென்னை: தமிழகத்துக்கு இருநாள் பயணமாக வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமியும் நடத்திய ஆலோசனையில் அதிமுக-பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் 30 தொகுதிகளுக்கு அதிகமாக கேட்டு பெறுவதற்கு பாஜக தரப்பில் வலியுறுத்தப்பட்டதாகவும், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா விரைவில் பேச்சுவார்த்தை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இருப்பினும் தொகுதி பங்கீடுகள் தொடர்பாக சட்டப் பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்புக்கு பிறகு பேசலாம் என அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும், அதுவரை முரணான கருத்துகளை இருதரப்பிலும் தெரிவிக்க வேண்டாம் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.