நடிகர் மாதவன் கண்ணில் சிக்கிய மாடல்!
கடல் அரிப்பைத் தடுக்க எப்படி இயற்கையாக மாங்க்ரோவ் காடுகள் பயன்படுகின்றன என்ற செயல்முறை விளக்கத்தை பார்வையிட்ட நடிகர் மாதவன், அது பற்றிய பதிவு ஒன்றை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மாங்க்ரோவ் நாளையொட்டி கடல் அரிப்பை அலையாத்தித் தாவரங்கள் தடுப்பது தொடர்பாக வைக்கப்பட்ட ஒரு ஸ்கேல் மாடலை பார்வையிட்ட அவர், ஒரு நல்ல தகவலை மிக நன்றாக விளக்கியுள்ளனர் என பாராட்டு தெரிவித்துள்ளார்.

அலையாத்தித் தாவரங்கள் அல்லது கண்டல் தாவரங்கள் (மாங்க்ரோவ்) எனப்படுபவை கடலின் கரையோரங்களில் உள்ள சதுப்பு நிலப் பகுதிகளிலும், உவர் நீரும் வளரும் தாவரங்கள். இவை அடர்த்தியாக வளரும் இடங்களில் கடல் அலையைத் தடுத்து அதன் வேகத்தைக் குறைத்து மண் அரிப்பை, நிலம் சேதமடைவதைத் தடுக்கின்றன. இந்த தாவரங்கள் நீரின் உயர்த்துக்கு ஏற்ப வளரக் கூடியவை. நிலத்தில் இவை வளரும் பகுதிகள் சதுப்புநிலக் காடுகளாக உள்ளன. இத்தகைய தாவரங்களில் கிட்டத்திட்ட 80 வேறுபட்ட இனங்கள் உள்ளன. அவை ஆக்சிஜன் குறைவான மண்ணில் வளரும் தன்மை கொண்டவை. பூமத்திய ரேகைக்கு அண்மையில் உள்ள வெப்பமண்டலப் பகுதிகளிலேயே அதிகம் காணப்படுகின்றன. மிகவும் கடினமான கால சூழலை தாங்கும் தன்மை கொண்ட ஒருசில இனங்கள் மிதவெப்ப மண்டலத்திலும் வாழுகின்றன. பெரும்பாலும் செடி இனங்கள் முதல் மிகப் பெரிய மரங்கள் வரை (சுமார் 60 மீட்டர் உயரம் வரை) இத்தாவர இனங்கள் அலையாத்தித் தாவர இனங்களில் இடம்பெற்றுள்ளன. கடல் அரிப்பையும், மண் அரிப்பையும் தடுப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன
You must log in to post a comment.