ஆனி மாத ராசி பலன்

கணிப்பு: “ஜோதிட ரத்னா”து.ராமராமாநுஜதாஸன்

மேஷம்: வருங்கால திட்டங்கள் யாவும் பூர்த்தியாகும். கௌரவப் பொறுப்புகள் தேடி வரும்.கோயில் திருவிழாவை முன்னின்று நடத்துவீர்கள். மூத்த சகோதர வகையில் ஏற்பட்ட மனத்தாங்கல்கள் நீங்கி ஒற்றுமை கூடும்.  பங்குவர்த்தகம் கமிஷன் வகைகளால் பணவரவு உண்டு. ஆடம்பர செலவுகளை தாங்களாகவே குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். சிலர் இருக்கும் வீட்டை விரிவுபடுத்தி கட்டும் எண்ணத்தை நிறைவேற்றுவீர்கள். பொதுவாக வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதைக் கூடும். பலமுறை முயன்றும் முடிக்க முடியாத பல பணிகளை முடித்துக் காட்டுவீர்கள்.

பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். நீண்ட நாளாக எதிர்பார்த்திருந்த குழந்தை பாக்கியம் ஏற்படும். வீண் பிரச்னைகளில் தலையிட வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாகனப் பயணங்களில் கவனம் தேவை. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டு. நீண்ட நாள்களாக நிலுவையில் இருந்த பணம் கைக்கு வந்து சேரும். மனதில் உற்சாகம் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தாயின் உடல் நிலை ஆரோக்கியம் அடையும். மாணவர்கள் கல்வியில் மேன்மையடைவர். பூர்வீக சொத்துக்கள் கைக்கு வந்து சேரும்.

நீண்டநாள் குலதெய்வ பிரார்த்தனைகளை குடும்பத்துடன் சென்று நிறைவேற்றுவீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். தந்தையுடன் முடிந்தவரை வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்று.

பொதுவாக தங்கள் திறமையாலும் கடின உழைப்பாலும் அதிக வருமானத்தைப் பெறுவீர்கள்.  பங்குதாரர்களால் ஆதாயம் உண்டு. அவர்களுக்கு பதவி உயர்வு வந்துசேரும். மேலும் புதிய பல ஒப்பந்தங்களால் லாபம் கூடும்.

ரிஷபம்: கடின உழைப்பால் பல சாதனைகளை சாதிப்பீர்கள். நீண்டநாளாக ஏற்பட்டுள்ள மனப் போராட்டங்கள் ஓயும். சமயோசிதமான பேச்சால் தடைபட்ட பணிகளை முடித்து வெற்றி காண்பீர்கள். மேலும் நீண்ட நாளாக எதிர்பார்த்து காத்திருந்த பணம் கைக்கு வந்து சேரும். பழைய கடன்கள் ஒவ்வொன்றாகத் தீரும். கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு நீங்கி ஒற்றுமை கூடும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. வீண் பழி வழக்குகள் வந்து நீங்கும். சேமிப்பதில் சற்று சிக்கல்கள் உண்டு. இருப்பினும் திடீர் பணவரவு சேமிப்பு உயர வாய்ப்புண்டு. வாகனத்தை இயக்கும்போது அதிக கவனம் தேவை. முடிந்த வரை இரவு நேரப் பயணங்களை தவிர்க்கவும். கௌரவப் பதவிகள் தேடி வரும். சில சமயங்களில் தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

தோல்வி தாழ்வு மனப்பான்மை இருந்து விடுபடுவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடையே ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போவது நன்று. உறவினர்கள் சிலர் உங்களுக்குள் வீண் வம்பு சண்டை ஏற்படுத்தக்கூடும். எனவே எச்சரிக்கை தேவை. அதேபோல் உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். முடிந்தவரை வெளி உணவுகளை தவிர்க்க வேண்டும். நடைபயிற்சி யோகா தியானம் ஆகியவற்றை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். பிரிந்து சென்ற பழைய நண்பர்கள் சொந்த-பந்தங்கள் வீடு தேடி வருவார்கள். சிலர் பழைய வாகனத்தை மாற்றி புது வாகனத்தை வாங்குவீர்கள். குலதெய்வ கோயிலுக்குச் சென்று அங்குள்ள பழுதுகள் நீக்கி சரிசெய்வீர்கள்.  வியாபாரத்தில் பலமுறை போட்டிகளை சமாளிப்பீர்கள்.

மிதுனம்: பணம் வரவு உயர்ந்து திருப்தி தரும். எதிர்ப்புகள் அகலும். முகப்பொலிவு ஆரோக்கியம் கூடும்.  வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறும்.  உறவினர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.  கல்வியாளர்கள் அறிஞர்களின் நட்பு கிடைக்கும்.  பொது விழாக்கள் சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழைய சிக்கல்களை பேசித் தீர்ப்பீர்கள். நீண்ட நாள் நினைத்திருந்த வாரிசு யோகம் உருவாகும். பிள்ளைகளால் சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும்.

நீண்ட நாள்களாக தள்ளிப் போன திருமணப் பேச்சுவார்த்தை கைகூடிவரும். திடீர் செலவுகள் ஏற்பட்டாலும் சமாளிப்பீர்கள். ஒரே நேரத்தில் பல பணிகளை செய்து முடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். எனவே உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் அனாவசியமான பேச்சுக்களை தவிர்ப்பது நன்று. எதிர்பாராத பயணங்களும் அலைச்சல்களும் வந்துபோகும். இருப்பினும் பயணங்களால் ஆதாயம் உண்டு.

எதையும் திட்டமிட்டு உரிமையுடன் செய்யப் பாருங்கள்.  குடும்பத்தின் அந்தரங்க விஷயங்களை மூன்றாம் நபரிடம் தெரிவிப்பது கூடாது. அதேபோல் யாருக்கும் ஜாமீன் கையெழுத்து இட வேண்டாம். தோல் நோய் உள்ளவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.  வெளிவட்டாரத்தில் உஷாராக பழகுங்கள். வருங்காலத்தை மனதில் கொண்டு சேமித்து வைத்துக்கொள்ள பழகுங்கள்.  பூர்வீக சொத்து பிரச்னைகள் தலைதூக்கும்.  பண விஷயங்களில் கவனத்துடன் இருங்கள்.  அதேபோல் அலுவலக கோப்புகளில் கவனம் தேவை.  புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்போது படிவங்களை பலமுறை படித்துப் பார்ப்பது நன்று.

ஆன்மிகத்தில் மனம் லயிக்கும். சிலர் வெளி மாநில மாவட்ட புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். அரசு தொடர்புடைய காரியங்கள் முழுமையடையும். கடின உழைப்பாலும் தொலைநோக்குப் பார்வையாலும் தங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும். அக்கம்பக்கத்தாரிடம் அனுசரித்துச் செல்லவும்.

கடகம்: தங்கள் முயற்சிகளில் கூடுதல் பலம் தேவை. திடீர் பயணங்கள் அதிகரிக்கும்.  அவ்வப்போது திடீர் பண பற்றாகுறை ஏற்படும்.  இருப்பினும் சமாளித்து விடுவீர்கள்.  குடும்ப அந்தரங்க விஷயங்கள்  வெளியில் வருவதை தவிர்க்கவும்.  பிரச்னைகள் எதுவானாலும் அவற்றை எல்லாம் சமாளிக்கக்கூடிய மனோபலம் தங்களுக்கு கிடைக்கும்.

முடங்கியிருந்த நீங்கள் இனி முன்னேற்ற பாதையை நோக்கி பயணிப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள்.  படபடப்பு வேலைச்சுமை செரிமானக் கோளாறு வந்து நீங்கும்.  திட்டமிட்ட காரியங்களை அலைந்து முடிக்க வேண்டியிருக்கும்.  குலதெய்வ கோவிலை புதுப்பிப்பீர்கள்.  தங்க ஆபரணங்கள் வீட்டு பத்திரங்களை கவனமாக கையாளுங்கள்.

பொருளாதாரம் திருப்தியைத் தரும்.  கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும்.  பங்கு வர்த்தகம் வட்டி வாடகை வருமானம் உயரும். சொந்தபந்தங்கள் மத்தியில் பெரும் புகழ் அடைவீர்கள்.  குடும்பத்தில் இத்தனை நாள் இருந்த இறுக்கமான சூழ் நிலைகள் நீங்கும்.  அலைச்சல் ஓய்வில்லாத பணிகள் இருக்கும்.  அதனால் ஆதாயம் உண்டு.  உடன்பிறந்தவர்கள் தங்கள் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.

அயல்நாட்டில் இருந்து இனிப்பான செய்தி வந்து சேரும்.  புனித ஸ்தலங்களுக்கு சொந்த பந்தங்களுடன் சென்று வழிபடுவார்கள்.  அயல்நாட்டில் பணிபுரிபவர்கள் நல்ல சம்பளத்தில் அடுத்தக் கட்ட பணி கிடைக்கும். மேலும் அரசாங்க பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய விரும்பிய இடமாற்றமும் வந்து சேரும்.  அரசியல் கலைத்துறையினர் புதிய ஒப்பந்தத்தை பெறுவீர்கள் . மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண் பெறுவார்கள்.

சிம்மம்: தங்கள் முயற்சிகளில் அதிக சிரமமின்றி பலன் காண்பீர்கள்.  உறவினர்கள் வருகையால் உள்ளம் மகிழும்.  நீண்டநாள் எதிர்பார்த்திருந்த புத்திர பாக்கியம் ஏற்படும்.  சிலர் குலதெய்வக் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.  பணியாளர்களுக்கு  நல்ல நிறுவனத்தில் பணி அமையும். மேலும் பல சிக்கல்களுக்கு எளிதான தீர்வு கிடைக்கும்.

பொது விழாக்கள், கல்யாணம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள்.  சிலர் ஆலயத் திருப்பணிகளில் ஆர்வம் கொள்வீர்கள்.  நண்பர்களுடன் இன்பச் சுற்றுலா சென்று மகிழ்வீர்கள்.  பிள்ளைகளால் பெருமை ஏற்படும்.  நீண்டநாள் வரவேண்டிய பழைய பாக்கிகள் கைக்கு வந்து சேரும்.  பணம் கொடுக்கல் வாங்கல் சீராகும்.  அரசியலில் பொதுமக்கள் மத்தியில் நல்ல பெயர் பெறுவீர்கள்.

அரசு உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும்.  மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்க பெறுவீர்கள்.  பணம் பல வழிகளில் வந்து சேரும்.  குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு மரியாதை உயரும்.  பிரிந்த நண்பர்கள் ஒன்று சேருவர். நீண்ட நாள் தடைபட்டிருந்த திருமணம் நடைபெறும். கூட்டாளிகளுடன் சற்று விட்டு கொடுத்து செல்லவும்.

விவசாயிகளுக்கு பலன் கிடைக்கும். கலைத் துறையினர் பெரிய மனிதர்களின் தொடர்புகள் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவார்கள்.  மாணவ-மாணவிகள் படிப்பில் மேலும் ஆர்வம் செலுத்தவேண்டும்.  விளையாட்டு போக்கை கைவிடுதல் நன்று.

கன்னி: முடிந்த வரை ஆடம்பர செலவுகளை குறைக்கப் பாருங்கள்.  சேமிக்கும் அளவிற்கு வருவாய் அதிகரித்தாலும் வீண் செலவுகள் செய்வதை முடிந்தவரை கட்டுப்படுத்திக் கொள்ளவும்.  உறவினர்களால் அலைச்சல் மனக்கசப்பு ஏற்பட்டு நீங்கும்.

முடிந்த வரை இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது.  யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம்.  உணவு விஷயத்தில் கவனம் தேவை. நண்பர்களுடன் வீண் வாக்குவாதங்களில் ஈடுபட கூடாது.  சில சமயங்களில் இனம்புரியாத கவலைகள் வந்துபோகும்.  வரவேண்டிய பழைய பாக்கிகள் வசூலாகும்.  புதியவர்களை நம்பி பழைய நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள்.

அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை தாமதிக்கக் கூடாது.  அரசு கோப்புகளை அலுவலக கோப்புகளை பராமரிக்கும் போது கவனம் தேவை.  பயணங்களால் அலைச்சல்கள் இருக்கும், ஆதாயம் உண்டு.

பிரிந்திருந்த தம்பதியர் ஒன்று சேர்வர்.  மரியாதை கூடும்.  தாய்மாமன் வகையில் சிலருக்கு கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும்.  சுமை ஏற்படும் இருப்பினும் மேலதிகாரிகளால் பாராட்ட பெறுவீர்கள்.  ஆன்மிகம் எண்ணம் அதிகரிக்கும். புதிய சொத்து பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காண்பது நன்று.  சில பணிகளில் தங்களைத் திடப்படுத்தி தீர்க்கமான முடிவுகள் எடுப்பது நன்று. சிலர் பழைய வீட்டை தங்கள் வசதிக்கேற்ப மாற்றி அமைத்துக் கொள்வீர்கள்.

மாணவர்கள் கல்வியில் நன்கு கவனம் செலுத்தி படிக்க வேண்டும்.  விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதைத் தற்போது தவிர்ப்பது நன்று.

துலாம்: புதிய சிந்தனைகள் உதயமாகும். வருங்கால திட்டங்கள் யாவும் நிறைவேறும். சாதுரியமான பேச்சாலும் சமயோசித புத்தியாலும் பல பிரச்னைகளை தீர்த்து முடிப்பீர்கள்.  பிள்ளைகளால் உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும்.  பழைய கடனை கடைசியில் ஒரு பகுதி தீர்க்க முயற்சி செய்து வெற்றி காண்பீர்கள்.  சிலருக்கு வங்கிக் கடன் உதவி கிடைக்கும்.

பழைய வீட்டை இடித்து கட்டும் எண்ணம் தற்போது நிறைவேறும்.  சுபச் செலவுகளும் திடீர் பயணங்களும் அதிகரிக்கும்.  எதிர்பாராத வகைகளில் பணம் வந்து சேரும்.  லேசான தலைச்சுற்றல், தலைவலி வந்து நீங்கும்.  சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். குடும்பத்தாரின் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள். பூர்வீக சொத்துப் பராமரிப்புச் செலவு ஏற்படும்.  சிலர் பூர்வீக குடி பெறுவார்கள்.  பழைய வாகனத்தை மாற்றி புதியது வாங்குவீர்கள்.  உடன்பிறப்புகளால் ஆதாயமுண்டு.  சக தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் அனைத்து பணிகளும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.  அதனால் மேலதிகாரிகளின் பாராட்டு பெறுவீர்கள்.

எதிர்பார்த்த சம்பள உயர்வு வந்துசேரும்.  விரும்பிய இடமாற்றம் கிடைக்கும்.  ஆட்டோமொபைல்ஸ், இரும்பு சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள் லாபத்தைக் காண்பார்கள்.  புதிய தொழில் துவங்கும் எண்ணம் தற்போது நிறைவேறும்.  சிலர் அயல்நாடு செல்வார்கள்.  மாணவர்கள் படிப்பில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள்.  சிறுசிறு பயணங்களால் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதற்கேற்ற ஆதாயம் பெறுவீர்கள். அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் நற்பெயர் எடுப்பார்கள்.

விருச்சிகம்: இன்பமளிக்கும் செய்திகள் வீடு தேடி வரும் வரை செலவு செய்ய நேரிடலாம். பொறுமையுடன் செயல்பட வேண்டும்.  ஆன்மிகத்தில் நம்பிக்கை கூடும்.  மனதில் ஏற்பட்டிருந்த சோர்வுகள் அகன்று உற்சாகம் கரை புரளும்.  உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளில் ஈடுபாட்டுடன் செய்து முடித்து மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.  சம்பள உயர்வுக்கு வாய்ப்புண்டு கொடுக்கல் வாங்கல்களில் லாபம் ஏற்படும்.

விவசாயிகள் உற்பத்திப் பொருள்களின் மிகுந்த லாபத்தை எதிர்பார்க்க வேண்டாம்.  முதலீடு செய்யும் போது அதிக கவனம் தேவை. அரசியல்வாதிகளின் சிறு முயற்சிகள் கூட மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும். உணவில் கவனம் தேவை. குடும்பத்தார் இடையே கருத்து வேறுபாடு கூடாது.  குடும்ப விஷயங்களை மூன்றாம் நபரிடம் கூறுவது முற்றிலும் தவிர்க்கவும்.

சக தொழிலாளியிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். வீட்டுக்கு தேவையான ஆடம்பர அலங்கார பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள்.  எதிலும் சிக்கன நடவடிக்கைகளில் ஈடுபடுவது நன்று.  வியாபாரிகள் புதிய கிளைகளை துவங்குவார்கள்.  பிள்ளைகளின் போக்கில் எதிர்பார்த்த நல்ல மாற்றம் ஏற்படும்.  திடீர் பண வரவு செல்வாக்கு உண்டு.  சில விஷயங்களில் உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப் பாருங்கள்.  உறவினர்கள் நண்பர்கள் சிலர் பண உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள்.  அவர்களிடம் எச்சரிக்கையுடன் பழகவும்.

வங்கிக் கடன் கிடைக்க வாய்ப்புண்டு.  பிரபலங்கள் நீண்டநாள் எதிர்பார்த்த வெளிநாட்டு நிறுவனத்தில் பணி கிடைக்க பெறுவீர்கள்.  குறிப்பாக சாமர்த்தியமாகப் பேசி பல காரியங்களை முடிப்பீர்கள்.  கை கால் வலி வந்து நீங்கும். தகவல் தொழில்நுட்பத் துறையினர் வாழ்வில் ஏற்றம் உண்டு. கணவன் மனைவி விட்டுக்கொடுத்துச் செல்ல என்னால் நினைத்திருந்த நான்கு சக்கர வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். பொது விஷயங்களில் மிகுந்த கவனத்துடன் பொறுப்புடன் ஈடுபட்டு நற்பெயர் எடுப்பீர்கள்.

தனுசு: துணிச்சலாக சில முடிவுகளை எடுத்து அனைவரின் பாராட்டும் பெறுவீர்கள்.  புதிய நபர்கள் அறிமுகமாவார்கள்.  வர வேண்டிய பணம் கைக்கு வந்து சேரும்.  வருங்காலத்திற்காக சேமிக்கத் தொடங்குவீர்கள்.  வழக்குகள் சாதகமாக முடியும்.  கோபப்படுவீர்கள் எனவே கவனம் தேவை.  உடல் ஆரோக்கியதிற்கு எளிய உடற்பயிற்சிகளை செய்து கொள்வது நல்லது.

முடிந்தவரை வெளி உணவுகளை தவிர்க்கவும். மருத்துவரின் ஆலோசனை இன்றி சுய சிகிச்சைக் கூடாது. கடன் கொடுப்பது, வாங்குவது கூடாது.  முக்கியமாக ஜாமீனுக்கு நிற்கக் கூடாது.  இரவு நேர பயணங்களை முடிந்தவரை தவிர்க்கவும். நண்பர்களிடம் உறவினர்களிடம் வாக்குவாதம் கூடாது.  எதிலும் விட்டுக் கொடுத்து அனுசரித்து செல்வது நல்லது. புதிய முதலீடுகளை தற்போது ஒத்தி வைக்கவும்.  வாகனச் செலவுகள் வரும்.

தொழிலில் மந்தநிலை இருப்பினும் வரவுக்கு குறைவிருக்காது.  சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகளில் தாமதம் ஏற்படும்.  புதிய தொழில் ஆரம்பிக்கும் பலரிடம் ஆலோசனை கேட்பது நன்று. ஆடை ஆபரண சேர்க்கை உண்டு. நீண்டநாள் திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு திருமணம் கைகூடும்.

மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பீர்கள்.  அரசியல்வாதிகள் தலைமையிடம் பேச்சை மீறாமல் நடப்பது நன்று.  விவசாயிகள் எதிர்பார்த்த இருந்து அரசு உதவிகள் கிடைக்கப் பெறும் காலம்.  இது கணவன் மனைவி கருத்து வேறுபாடு நீங்கி ஒற்றுமை ஏற்படும்.  சிலருக்கு எதிர்பாராத திடீர் இடமாற்றம் ஏற்படும்.  எனவே மேலதிகாரிகளின் பேச்சை கவனத்துடன் கேட்டு நடப்பது நன்று.

மகரம்: குடும்பத்தில் அமைதி நிலவும். தங்கள் ஆலோசனையை அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொள்வார்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும்.  நீண்ட நாளாக தடைபட்ட பல காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள்.  சிக்கனம் தேவை. குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும்.  இரவு நேர பயணத்தை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது. யாருக்கும் முன்ஜாமின் கொடுக்க முன்வராதீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.  சுய மருத்துவம் கூடாது.

மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகளை உட்கொள்ளவும். முடிந்தவரை உழைப்பிற்கேற்ற ஓய்வெடுத்துக் கொள்ளவும். பணம் கொடுக்கல் வாங்கலில் அதிக கவனம் தேவை. வெளி உணவுகளை முடிந்தவரை தவிர்க்கப் பாருங்கள். சக தொழிலாளர்களிடமும் விட்டு கொடுத்து செல்லவும்.

உறவினர் வருகையால் உள்ளம் மகிழும். முதலீடு செய்யும் முன் அனுபவஸ்தர்களைக் கலந்து ஆலோசனை செய்வது நன்று.  அரசியல்வாதிகளுக்கு மிகப்பெரிய பொறுப்பு வந்து சேரும்.  மாணவர்கள் பாடத்தில் மட்டும் கவனம் செலுத்தவும்.  விளையாட்டுகளில் ஈடுபடுவதைத் தற்போது நிறுத்திக் கொள்ளவும்.  சிலர் பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனத்தை வாங்குவார்கள்.  வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள்.  உறவினர்கள் நண்பர்கள் இல்ல சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, அடிக்கடி கோயில் தரிசனம் மற்றும் மிகப்பெரிய புண்ணியத் தலங்களுக்கும் சென்று வருவீர்கள்.  புனித நதிகளில் நீராடும் பாக்கியம் பெறுவீர்கள்.

கும்பம்: திடீர் யோகம் பணப்புழக்கம் அதிகரிக்கும்.  திட்டமிட்ட காரியங்களை தடை இல்லாமல் செய்து முடிப்பீர்கள்.  புதிய சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும்.  பழைய பாக்கிகளை பைசல் செய்வீர்கள்.  வழக்குகள் அனைத்திலும் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.  அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு.  பல விசேஷங்களுக்கு சென்று உறவினர் நண்பர்களுடன் கலந்து கொண்டு மகிழ்வீர்கள்.  உங்களுக்கு முதல் மரியாதை கிடைக்கும்.  சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் வெற்றியடையும்.  தங்கள் முயற்சிக்கு உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.  வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதைக் கூடும்.

பிள்ளைகளால் பெருமை ஏற்படும். வியாபாரிகள் புதிய கிளைகளை தொடங்கும் எண்ணத்தை தற்போது நிறைவேற்றி மகிழ்வீர்கள்.  குடும்பத்தில் இத்தனை நாள் ஏற்பட்டிருந்த இனம்புரியாத கவலைகள், வாக்குவாதங்கள் இனி இருக்காது.

வருமானத்தை உயர்த்த புது வழிகளில் முயல்வீர்கள்.  நீண்ட நாளாக வராமலிருந்த பணம் கைக்கு வந்து சேரும். தாழ்வு மனப்பான்மை நீங்கும்.  நேர்மறை எண்ணங்கள் உருவாகும்.  தடைபட்ட வீடு கட்டும் பணியைத் தொடர்வீர்கள்.  சிலருக்கு அயல்நாட்டில் நிரந்தர பணி அமைய வாய்ப்பு உண்டு.  ஒரே நேரத்தில் நான்கைந்து பணிகளை சேர்த்து பார்க்க வேண்டியிருக்கும்.

உழைப்புக்கேற்ற ஓய்வு தேவை. முடிந்த வரை ஆடம்பர செலவுகளை குறைக்கப் பாருங்கள்.  புதிய நபர்களிடம் குடும்ப விஷயங்களைப் பகிர வேண்டாம்.  நீண்ட நாள்களாக தரிசிக்க நினைத்திருந்த புண்ணிய ஸ்தலங்களுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள்.

மீனம் : காலத்துக்கேற்ற ஆதாயம் உண்டு.  பால்ய நண்பர்களால் உதவிகள் உண்டு.  பழைய கடன் அவ்வப்போது நினைவுக்கு வந்து கலக்கத்தை ஏற்படுத்தும்.  பழைய கடன்களைத் தீர்க்க திட்டம் தீட்டுவீர்கள்.  அரசால் ஆதாயம் உண்டு. சமூகத்தில் நன்மதிப்பு ஏற்படும். உழைப்புக்கேற்ற வருமானம் உண்டாகும். நினைத்த காரியத்தை எப்பாடுபட்டாவது சாதித்து விடுவீர்கள்.

செயல்களில் உற்சாகமும் ஆர்வமும் கூடும். சகோதர வகையில் நன்மை உண்டு.  இவர்களை தங்களது மேலதிகாரிகள் பாராட்டுவார்கள்.  சிலருக்கு பணி இடமாற்றம் ஏற்படும்.  உத்தியோக பிரிவில் மாற்றம் உண்டு.  வியாபாரிகளுக்கு கூட்டுத்தொழில் ஒற்றுமை ஓங்கும்.  புதிய முதலீடுகளை கூட்டாளிகளை கலந்தாலோசித்து செய்யவும்.  பங்குசந்தையில் ஈடுபடும் போது கவனம் தேவை.

விவசாயிகளுக்கு அதிக மகசூல் கிடைத்து லாபம் உண்டாகும்.  அரசியல்வாதிகளுக்கு சமூகத்தில் அந்தஸ்தான பதவிகள் கிடைக்கும்.  பொதுமக்கள் மத்தியில் புகழ் கிடைக்கும்.  குறிப்பாக தங்கள் அனைத்து முயற்சிகளுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கும்.  கலைத்துறையினருக்கு புதிய பெரிய ஒப்பந்தங்கள் தேடி வரும் மாணவ மாணவிகளுக்கு கல்வியில் நாட்டம் உண்டாகும்.  இருப்பினும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன் மனைவியிடையே உறவு சுமூகமாக இருக்கும்.

சில அயல்நாட்டு பணிக்காக முயற்சிகள் செய்து கொண்டிருப்பீர்கள்.  மூத்த சகோதரர்கள் ஒத்துழைப்பால் குடும்பத்தில் ஏற்பட்டிருந்த பிரச்னைகளை பேசித் தீர்ப்பீர்கள்.  சிலர் வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். பூர்வீக சொத்துக்கள் கைக்கு வந்து சேரும்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.