960 வெளிநாட்டவர் விசா ரத்து
புதுதில்லி, ஏப்.3: தப்லிக் ஜமாத் நிகழ்வில் பங்கேற்ற 960 வெளிநாட்டவர்களின் சுற்றுலா விசா ரத்து செய்யப்படுவதாக இந்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸின் தாக்கம் மெல்ல அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தப்லிக் ஜமாத் நிகழ்வில் பங்கேற்ற வெளிநாட்டவர்களின் சுற்றுலா விசா ரத்து செய்யப்படுவதாக இந்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. வெளிநாட்டவர்கள் சட்டம் மற்றும் பேரிடர் மேலாண்மை சட்டம் ஆகியவற்றின் விதிகள் மீறப்பட்டதாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா பரவுதலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்வதற்கு மேலும் சில ஆலோசனைகளை வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு நாட்டு மக்களுக்கு காணொலிக் காட்சியை பகிரவுள்ளதாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
You must log in to post a comment.