6 கோடி பேர் தீவிர வறுமைக்கு தள்ளப்படுவர்: உலக வங்கி

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள நெருக்கடியால் உலகில் 6 கோடி பேர் தீவிர வறுமை நிலைக்கு தள்ளப்படுவர் என்று உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:
உலக வங்கி மூலம் தற்போது, 100 நாடுகளில் உதவித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் கோடிக்கணக்கானவர்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கொரோனா வைரஸால் உலகளாவிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக வறுமை ஒழிப்பில் பெறப்பட்ட அனைத்து பயன்களையும் இழந்துவிட்டோம். உலகெங்கும் 6 கோடி பேர் தீவிர வறுமை நிலைக்குத் தள்ளப்படுவர்.
அதிக வறுமைக்கு ஆளாகும் நாடுகளில் அடுத்த 15 மாதங்களுக்கு ரூ.16 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர்கள் செலவிடத் திட்டமிட்டுள்ளோம் என்று டேவிட் மல்பாஸ் கூறியுள்ளார்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.