5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு அமலுக்கான அரசாணை வெளியீடு


சென்னை: சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு நடத்துவதற்கான அரசாணை வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

சென்னை, கோவை, மதுரையில் 26-ம் தேதி காலை முதல்  29-ம் தேதி இரவு வரை முழு ஊரடங்கு  அமல்படுத்தப்படும்.  சேலம், திருப்பூரில் 26ம் தேதி காலை முதல்  28ம் தேதி இரவு வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

இந்த ஊரடங்கின்போது மருத்துவமனைகள், ஆய்வுக் கூடங்கள், மருந்தகங்கள், பால் விநியோகத்துக்கு தடை இல்லை.
மத்திய அரசு அலுவலகங்களிலும், வங்கிகளிலும் அத்தியாவசியப் பணிகளுக்கு தேவைப்படும் 33 சதவீத பணியாளர்களுக்கு மட்டும் அனுமதி உண்டு.
பெட்ரோல் பங்குகள் காலை 8 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை செயல்படும். செல்லிடப்பேசி மூலம் ஆர்டர் செய்து வீடுகளுக்கு அனுப்பப்படும் உணவுக்கு அனுமதி.
ரேஷன் கடைகள், சமையல் கேஸ் ஏஜென்சி, அம்மா உணவகங்கள், ஏ.டி.எம்.கள் வழக்கம் போல் செயல்படும். கோயம்பேடு மொத்த காய்கறி சந்தைகள் உரிய விதிகளுக்கு உட்பட்டு செயல்படும்.
தலைமைச்செயலகம், சுகாதாரம், குடிநீர் வழங்கல் துறை, காவல்துறை தேவையான பணியாளர்களுடன் செயல்படும்.
பத்திரிகை மற்றும் காட்சி ஊடகங்கள் செயல்பட அனுமதி உண்டு

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.