4 நகரங்களில் கொரோனா தீவிரம்: உள்துறை அமைச்சகம் தகவல்
புதுதில்லி:கொரோனா பாதிப்பு சென்னை,அகமதாபாத்,சூரத், ஐதராபாத் ஆகிய நகரங்களில் தீவிரமாக உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
இதுகுறித்து உள்துறை அமைச்சகம்
வெளியிட்ட அறிவிப்பு:
நாட்டின் ஒருசில இடங்களில் ஊரடங்கு உத்தரவு மீறப்படுவதாக தகவல்கள் வெளிவருகின்றன. ஊரடங்கு விதிகளை மீறுவது ஆபத்தானது. கொரோனா வைரஸ் பரவலுக்கு இது வழிவகுக்கிறது.
கொரோனா பாதிப்பு அதிதீவிரமாக உள்ள மாவட்டங்களாக உருவெடுத்து வரும் குஜராத்தின்அகமதாபாத் மற்றும் சூரத்,
மகாராஷ்டிரத்தில் தானே, தெலங்கானாவில் ஐதராபாத், தமிழகத்தில் சென்னை ஆகிய இடங்களில் கொரோனா பாதிப்பு மிகவும் தீவிரமாக உள்ளது.
நாட்டில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் ஹாட்ஸ்பாட் பகுதிகளை மதிப்பீடு செய்ய மத்தியக் குழுக்கள் ஏற்கெனவே
அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுக்கள் அந்தந்த நகரங்களில் ஆய்வு செய்து, மாநில அரசுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கும்.
You must log in to post a comment.