35 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்யும் முடிவை நிறுத்தி வைத்தது ஹெஎஸ்பிசி வங்கி
புதுதில்லி முப்பத்தைந்தாயிரம் பேரை பணி நீக்கம் செய்வதாக அறிவித்திருந்த ஹெச்எஸ்பிசி வங்கி, அந்த முடிவை தற்போது நிறுத்தி வைத்துள்ளதாக கூறியுள்ளது.
அடுத்த 3 ஆண்டுகளில் 35 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்யப்போவதாக பிரபல வங்கி சேவை நிறுவனமான ஹெச்எஸ்பிசி கடந்த பிப்ரவரி மாதம் அறிவிப்பு வெளியிட்டது. இது வங்கி ஊழியர்களை அதிர்ச்சி அடையச் செய்தது.
இநநிலையில் அம்முடிவை நிறுத்தி வைப்பதாக அந்த வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் நீடிக்கும் சூழலில் தங்கள் ஊழியர்கள் பணி தேடி அலைவதை விரும்பவில்லை என வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
You must log in to post a comment.