3 மாநகராட்சிகளில் வியாழன் மாலை வரை கடைகள் இயங்க அனுமதி


சென்னை: சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மாநகராட்சிகளில் வியாழக்கிழமை ஒரு நாள் காலை 6 முதல் மாலை 5 மணி வரை கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நோய்த்தொற்று பரவுவதை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட நாடு தழுவிய ஊரடங்கு மே 3-ஆம் தேதி வரை உள்ளது.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ஒரு மாதகாலம் கடந்தும் கொரோனா பரவல் வேகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. ஊரடங்கு கட்டுப்பாடுகளை பல இடங்களில் பொதுமக்கள் மீறுவதே இதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது.
தமிழகத்தில் மக்கள் தொகை அதிகம் உள்ள மாநகராட்சிப் பகுதிகளில் கரோனா பரவல் வேகத்தைக் கட்டுப்படுத்த சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மாநகராட்சி பகுதிகளிலும் கடந்த 26 முதல் 29 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.