3 நாள்களுக்கு தமிழகத்தில் அனல் காற்று
சென்னை: தமிழகத்தில் 3 நாள்களுக்கு அனல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
வங்க கடலில் உருவான அம்பன் புயல் புதன்கிழமை அதிதீவிர புயலாக மேற்கு வங்கத்துக்கும், வங்க தேசத்துக்கும் இடையே கரையைக் கடந்தது. இந்த புயலால் காற்றின் ஈரப்பதம் முழுமையாக ஈர்க்கப்படும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது.
புயல் புதன்கிழமை கரையைக் கடப்பதற்கு முன்பே தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. தற்போது தமிழகத்தில் அடுத்த 3 நாள்களுக்கு அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக வடதமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகக் கூடும். அத்துடன் மன்னார் வளைகுடா பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
You must log in to post a comment.