கார்ல் மார்க்ஸ் பிறந்த தினம் (1818)

1260 – மங்கோலியப் பேரரசின் மன்னனாக குப்ளாய் கான் முடி சூடிய நாள்.


1762 – ரஷ்யாவும் புரூசியாவும் அமைதி உடன்பாட்டை எட்டிய நாள்.
1916 – டொமினிக்கன் குடியரசை அமெரிக்க கடற்படையினர் கைப்பற்றினர்.


1925 – தென்னாப்பிரிக்காவில் ஆப்பிரிக்கன் மொழி அதிகாரபூர்வ மொழியானது.

1936 – எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா நகரை இத்தாலியப் படைகள் கைப்பற்றினர்.


1941 – எத்தியோப்பியாவின் மன்னர் ஹைலி செலாசி அடிஸ் அபாபா திரும்பினார். இந்நாள் அங்கு விடுதலை நாளாகக் கொண்டாடப்படுகிறது.
1942 – பிரித்தானியப் படையினர் மடகஸ்காரைத் தாக்கினர்.
1944 – மகாத்மா காந்தி சிறையிலிருந்து விடுதலையானார்.
1945 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மன் படைகள் கனடா மற்றும் பிரித்தானியப் படைகளால் நெதர்லாந்து, டென்மார்க் நாடுகளில் இருந்து விரட்டப்பட்டனர்.
1945 – இரண்டாம் உலகப் போர்: நாசிகளை எதிர்த்து பிராக் நகரில் கிளர்ச்சி தொடங்கியது.

1945 – இரண்டாம் உலகப் போர்: ஆஸ்திரியாவின் நாசிகளின் மோதோசென் வதை முகாம் விடுவிக்கப்பட்டது.


1950 – தாய்லாந்தின் 9-ஆம் ராமா மன்னராக பூமிபால் அடுள்யாடெ முடி சூடினார்.


1955 – மேற்கு ஜெர்மனி முழுமையான விடுதலை பெற்றது.

1961 – மேர்க்குரி திட்டம்: அலன் ஷெப்பார்ட் விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது மனிதரும் முதலாவது அமெரிக்கரும் ஆனார்.


1976 – புதிய தமிழ்ப் புலிகள் என்ற பெயருடனிருந்த இயக்கத்துக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் என்று பெயர் மாற்றப்பட்டது.

1980 – 6 நாள்களாக தீவிரவாதிகளால் முற்றுகையிடப்பட்டிருந்த லண்டனின் ஈரானியத் தூதரகத்தின் மீது வான்படையினர் தாக்குதலை ஆரம்பித்தனர்.


1981 – ஐரிஷ் புரட்சியாளர் பொபி சான்ட்ஸ் சிறையில் உண்ணாவிரதமிருந்து இறந்தார்.


1991 – ஈழத்துப் பெண் கவிஞர் சிவரமணி தனது 23- ஆம் வயதில் தற்கொலை செய்துகொண்டார்.

2006 – சூடான் அரசுக்கும் சூடான் விடுதலை இராணுவத்துக்கும் இடையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.


இந்நாளில் சிறப்புகள்
1818 – கார்ல் மார்க்ஸ் – பிறந்த நாள்.
1916 – பி. யு. சின்னப்பா, தமிழ்த் திரைப்பட நடிகர், பாடகர் – பிறந்த நாள்.
சர்வதேச நாடுகள் செவிலியர்கள் நாள்
டென்மார்க் – விடுதலை நாள் (1945)
எத்தியோப்பியா – விடுதலை நாள் (1941)
நெதர்லாந்து – விடுதலை நாள் (1945).
தென் கொரியா – சிறுவர் நாள்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.