பள்ளிகள் திறப்பு எப்போது?- அமைச்சர் தகவல்
சென்னை: தமிழகத்தில் எப்போது பள்ளிகளைத் திறப்பது என்பது குறித்து முதல்வர் தலைமையிலான உயர்மட்டக் குழு முடிவு செய்யும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது இத்தகவலை அவர் தெரிவித்துள்ளார்.
பள்ளி பாட புத்தகங்கள் , நோட்டுகள் உள்ளிட்டவை அந்தந்த பகுதியில் உள்ள சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு பள்ளிகள் திறக்கும் நாளில் மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் என்றும் அப்போது அவர் தெரிவித்துள்ளார்.
10-ஆம் வகுப்பு தேர்வு எப்போது?
கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கை அடுத்து தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு இன்னும் நடைபெறவில்லை. 11-ஆம் வகுப்பில் உரிய பாடப் பிரிவுகளை தேர்ந்தெடுப்பதற்கும், பாலிடெக்னிக் உள்ளிட்ட மேற்படிப்புகளுக்கும், டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட தேர்வுகள் எழுதுவதற்கும் 10-ஆம் வகுப்பு மதிப்பெண்கள் முக்கியமானதாக கருதப்படுவதால் தேர்வை நடத்த வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது.
அத்துடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காரணத்தால் பிளஸ் 2 கடைசித் தேர்வில் 34 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுத முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வும் முழுமையடையாத நிலையே காணப்படுகிறது.
இதனால் நிலுவையில் உள்ள தேர்வுகள் ஜூலை முதலாவது அல்லது இரண்டாவது வாரத்தில் நடத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கல்வியாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இவற்றை எல்லாவற்றையும் கருத்தில்கொண்டு பார்த்தால் வரும் ஜூலை இறுதி அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக ஆசிரியர்கள் தரப்பில் கூறுகின்றனர்.
You must log in to post a comment.