10-ஆம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அனுமதிச் சீட்டுடன் முகக் கவசங்கள்!

சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வுக் கூட அனுமதிச் சீட்டுடன் இரு முகக் கவசங்களும் வழங்கப்படவுள்ளன.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு வரும் ஜூன் 15 முதல் 25 வரை நடைபெறும் என ஏற்கெனவே பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இத்தேர்வை எழுதவுள்ள அனைத்து மாணவர்களுக்கும், தனித் தேர்வுகளுக்கும் வியாழக்கிழமை முதல் தேர்வறை அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவை அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலமும், பள்ளிக் கல்வித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாகவும் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாணவர்களுக்கு இம்முறை அனுமதிச் சீட்டுகளுடன் தலா இரண்டு முகக் கவசங்களும் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
ஜூன் 8, 9-ஆம் தேதிகளில், மாணவர்கள் தாங்கள் பயிலும் பள்ளிகளில் இவற்றை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, மாவட்டங்களுக்கு 45 லட்சத்துக்கும் மேற்பட்ட முகக் கவசங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.