10, 12 வகுப்புகளுக்கு கட்டாயம் பொதுத் தேர்வு:சிபிஎஸ்இ


புதுதில்லி:
ஊரடங்கு முடிந்ததும் கட்டாயம் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என்று கல்வித் துறை தெரிவித்துள்ளது.
போதிய கால அவகாசம் இருப்பதால் தேர்வுகளை ரத்து செய்யும் திட்டமில்லை என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
நாட்டில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில் ஊரடங்கு சில பகுதிகளில் நீட்டிக்கப்படும் வாய்ப்பு இருப்பதை அடுத்து சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் ஊரடங்கு முடிவடைந்ததும் 10,12 ஆம் வகுப்புகளுக்கு கண்டிப்பாக தேர்வு நடத்தப்படும். தேர்வு அட்டைணை, தேர்வு தொடங்குவதற்கு 10 நாள்களுக்கு முன்னதாக வெளியிடப்படும் என சிபிஎஸ்இ விளக்கம் அளித்துள்ளது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.