10, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்த மத்திய அரசு அனுமதி


புதுடில்லி: கொரோனா நோய்த் தொற்று பரவலை அடுத்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், ஒத்திவைக்கப்பட்ட 10, 12-ஆம் வகுப்பு தேர்வுகளை ஒருசில விதிமுறைகளை பின்பற்றி நடத்துவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.


நாடு முழுவதும் 10, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் ஜூன் மாதத்தில் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவின் பேரில், உள்துறை செயலாளர் அஜய் பல்லா, அனைத்து மாநில தலைமை செயலர்களுக்கும் சுற்றறிக்கை ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:


நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் மாநில கல்வி வாரியங்கள், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்ளிட்ட பாடத் திட்டங்களில் பயிலும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இவற்றை நடத்துவதற்கு அனுமதி கோரி மாநில அரசுகள், சிபிஎஸ்இ ஆகியன கோரிக்கைகள் வைத்துள்ளன. அதையடுத்து இத்தேர்வுகளை ஊரடங்கு நேரத்தில் நடத்த தளர்வு அளிக்கப்படுகிறது.


இத்தேர்வுகளுக்கான மையங்கள் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் அமையக் கூடாது. ஆசிரியர்கள், மாணவர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். உடல் வெப்ப பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு வசதியாக பேருந்து வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.