10 லட்சம் கொரோனா பரிசோதனைக் கருவிகளுக்கு தமிழக அரசு முன்பதிவு
சென்னை: கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்தும் நோக்கில் 10 லட்சம் பிடி-பிசிஆர் சோதனைக் கருவிகளை தமிழக அரசு தென்கொரிய நிறுவனத்திடம் முன்பதிவு செய்துள்ளது.
கொரொனா நோய்த் தொற்றின் வேகம் அதிகரித்துள்ள நிலையில், பரிசோதனைகளையும் தீவிரப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதையடுத்து 10 லட்சம் ஆர்டி-பிசிஆர் சோதனைக் கருவிகளை தென்கொரிய நிறுவனம் ஒன்றில் தமிழக அரசு முன்பதிவு செய்துள்ளது. இத்தகவலை சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
You must log in to post a comment.