10 லட்சத்தைக் கடந்தது கரோனா பாதிப்பு எண்ணிக்கை
புதுதில்லி: சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. உலகம் முழுவதும் 204 நாடுகளுக்கு பரவியுள்ள வைரஸ் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி கொரோனா வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்து 177 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 51 ஆயிரத்து 375 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும், கொரோனா பரவியவர்களில் 2 லட்சத்து 10 ஆயிரத்து 244 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீட்டுக்கு திரும்பியுள்ளனர்.
இந்தியாவில் கரோனா தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை 2,069-ஆகவும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 53-ஆகவும் உயர்ந்துள்ளது.
You must log in to post a comment.