10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு
சென்னை: தமிழகத்தில் வரும் ஜூன் 1 முதல் 12-ஆம் தேதி வரை 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அதன்படி,
ஜூன் 1 (திங்கள்கிழமை) – மொழிப்பாடம்
ஜூன் 3 (புதன்கிழமை) – ஆங்கிலம்
ஜூன் 5 (வெள்ளிக்கிழமை) – கணிதத் தேர்வு
ஜூன் 6 (சனிக்கிழமை) – விருப்பமொழிப் பாடம்
ஜூன் 8 (திங்கள்கிழமை) – அறிவியல்
ஜூன் 10 (புதன்கிழமை) – சமூக அறிவியல்
ஜூன் 12 (வெள்ளிக்கிழமை) – தொழில் பிரிவு தேர்வு
இதுதவிர பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கு நிலுவையில் உள்ள தேர்வு ஜூன் 2-ஆம் தேதி நடைபெறும்.
பிளஸ் 2 வகுப்புகளுக்கான வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் பாடங்களுக்கு ஜூன் 4-இல் தேர்வு நடைபெறும்.
மார்ச் 24-ஆம் தேதி பிளஸ் 2 தேர்வு எழுத முடியாமல் போன மாணவர்களுக்கும் வரும் ஜூன் 4-இல் மறுத்தேர்வு நடத்தப்படவுள்ளது.
பள்ளிகள் திறப்பு குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
தேர்வு எழுதும் மாணவர்கள் தனிநபர் இடைவெளியை பின்பற்றவும், தேர்வு அறைகளில் போதுமான சுகாதார வசதிகளும் ஏற்படுத்தப்படும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
You must log in to post a comment.