10-ஆம் வகுப்பு: தேர்வு அறைகளில் தலா 10 மாணவர்கள் மட்டுமே எழுத அனுமதி

சென்னை; கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக ஒத்திவைக்கப்பட்ட 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தப்படும்போது, ஒவ்வொரு தேர்வு அறையிலும் 10 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத அமர வைக்கப்படுவர் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தள்ளி வைக்கப்பட்ட 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் ஜூன் 1 முதல் நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை ஏற்கெனவே அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் நீடிப்பதால், மாணவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள பள்ளிக் கல்வித்துறை தயாராகி வருகிறது.
இந்த நிலையில், புதிய முறையில் 10 ஆம் வகுப்பு தேர்வு நடப்பாண்டு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை தரப்பில் கூறப்படுகிறது. அதன்படி, பத்தாம் வகுப்பு மாணவர்கள் படிக்கும் 12 ஆயிரம் பள்ளிகளும் தேர்வு மையங்களாக மாற்றப்படும்.
அதேபோல், ஒரு தேர்வு அறையில் 10 மாணவர்கள் மட்டுமே அமர வைக்கப்படுவார்கள். பள்ளி கல்வித்துறையில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் தேர்வுப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.