ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத தளபதி உள்பட 4 பேர் சுட்டுக்கொலை
ஸ்ரீநகர்: காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பதுங்கியிருந்த ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத தளபதி உள்ளிட்ட 4 பேரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
பெய்க்போரா கிராமத்தில் பயங்கரவாத இயக்கத் தலைவர் பதுங்கியிருப்பதாக வந்த தகவலை அடுத்து அப்பகுதிக்கு ராணுவ வீரர்கள், சி.ஆர்.பி.எப். வீரர்கள் மற்றும் மாநில போலீஸார் அடங்கிய சிறப்பு செயல்பாட்டு பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
ன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தெற்கு காஷ்மீரின் பல்வேறு மாவட்டங்களில் இணையதள சேவைகள் முடக்கம் செய்யப்பட்டன.
பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த இடத்தை பாதுகாப்பு படையினர் நெருங்கியபோது அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களில் ஒருவர் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத இயக்கத்தின் முக்கிய தளபதியான ரியாஸ் நைக்கூ.
பல ஆண்டுகளாக பிடிபடாமல் இருந்த அவரை பற்றி துப்பு தருவோருக்கு ரூ.12 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் அவந்திபோரா அருகே உள்ள ஷார்சாலி கிராமத்தில் பதுங்கி இருந்த இரு பயங்கரவாதிகளையும் பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.
You must log in to post a comment.