”ஹம் ஹார் நஹி மானேங்கே” – ரஹ்மானின் கொரோனா விழிப்புணர்வு பாடல்!


ஒவ்வொரு ஷேருக்கும் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.500 செல்கிறது!


சென்னை: கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
அரசியல்வாதிகளும், தொண்டு நிறுவனங்களும், திரையுலக பிரபலங்களும் தொடர்ந்து தங்களால் இயன்ற பங்களிப்பை அளித்து வருகின்றனர்.
இந்த வரிசையில் ஏ.ஆர்.ரஹ்மான் கொரோனா விழிப்புணர்வுக்காக பாடல் ஒன்றை வெள்ளிக்கிழமை முகநூல் நேரலையில்
இந்த பாடலை இந்தியாவில் உள்ள பல்வேறு பின்னணி பாடகர்கள் பாடியுள்ளனர்.
ஹம் ஹார் நஹி மானேங்கே” ப்ரஸூன் ஜோஷி எழுத, ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில், கத்திஜா ரஹ்மான். சிவமணி, ஷ்ருதி ஹாசன், ஜோனிட்டா காந்தி, மிகா சிங், ஷாஷா திருப்பதி, மோஹித் சௌஹான், ஜாவேத் அலி, சித் ஸ்ரீராம், ஹர்ஸ்தீப் கௌர், மோஹினி தேய், அசத் ஹான், நீத்தி மோகன், அபேய் ஜோத்கபூர் ஆகியோர் அந்த பாடலை பாடியுள்ளனர்.
மக்கள் மத்தியில் இந்த பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சேர்ந்தே மீள்வோம் என்ற பொருள் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் இந்த பாடல் குறித்து ஏ. ஆர். ரஹ்மான், ஒரு நல்ல காரியத்திற்காக இந்த பாடல் எங்கள் அனைவரையும் இணைத்துள்ளது. அதே போன்று இந்த தேசமும் ஒன்றிணைய இந்த பாடல் உத்வேகம் தரும் என்று கூறியுள்ளார்.

இந்த பாடலின் முக்கிய அம்சம் என்னவென்றால் ஒருமுறை இப்பாடலை பகிர்ந்தால் எச்டிஎப்சி வங்கியில் இருந்து ரூ.500, பிரதமர் நிவாரண நிதி கணக்கான pm cares க்கு சென்றுவிடும். ஏற்கெனவே இந்த வங்கி பிரதமரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.150 கோடி வழங்கியுள்ளதாகவும் வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.