வெளிமாநிலங்களில் இருந்து வருவோர் இருவாரம் தனிமைப்படுத்தப்பட வேண்டும்
ஆட்சியர்களுக்கு தமிழக தலைமைச் செயலர் சண்முகம் கடிதம்
சென்னை: புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தமிழகம் வரும் சூழலில் அவர்கள் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சிக்கியுள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பத் தொடங்கியுள்ளனர்.
புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக சிறப்பு ரயில்களை இயக்கவும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தமிழகம் வரும் சூழலில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஆட்சியர்கள், அந்த நபர்களை 14 நாள்கள் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதம் மூலம் கேட்டுக்கொண்டுள்ளார்.
வெளிமாநிலங்களில் இருந்து வருவோர் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்தகொள்ள வேண்டும். 14 நாள்கள் தனிமையில் இருக்க வேண்டும். இதை மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண்டும்.
அதேபோல் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு செல்வோரும் 14 நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தலைமைச் செயலர் குறிப்பிட்டுள்ளார்.
You must log in to post a comment.