வெப்பச் சலனம்: 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு
சென்னை: வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், மதுரை,தேனி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். அதேபோல் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலத்தீவு, லட்சத்தீவு பகுதிகளில் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.
You must log in to post a comment.