வீடு திரும்பினார் மன்மோகன் சிங்


சென்னை: தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினார்.
கடந்த 10-ஆம் தேதி இரவு நெஞ்சுவலி காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதைத் தொடர்ந்து அவர் நலம்பெற அரசியல் கட்சித் தலைவர்கள், அவரது நலம் விரும்பிகள் பலரும் பிரார்த்தனை செய்தனர்.
செவ்வாய்க்கிழமை அவரது உடல்நிலை தேறியதை அடுத்து தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து நண்பகலில் வீடு திரும்பினார்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.