விவசாயிகள் இப்போது கூட ரூ.6 ஆயிரம் பெற வாய்ப்பு

சென்னை: மத்திய அரசின் திட்டமான பிரதான் மந்திரி கிஷான் சம்மான் நிதி திட்டத்தில் (PM Kisan) ரூ.6 ஆயிரம் பெறுவதற்கு இப்போதுகூட விவசாயிகள் விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளது.


பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 தொகை மூன்று சம தவணைளாக, தலா ரூ.2000 என வழங்கப்படும். ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி அளிக்கும் இந்த திட்டத்தின் மூலம் இதுவரை 9 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் பலனடைந்துள்ளனர். இன்னமும் ஏராளமான விவசாயிகள் விண்ணப்பிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இத்திட்டம் இன்னும் முடிவடையாததால் இதுவரை விண்ணப்பிக்காத விவசாயிகள் தாமதமின்றி விண்ணப்பம் செய்யலாம்.
இத்திட்டத்தில் பதிவு செய்ய இரு வழிகள் உண்டு. ஒன்று PM-Kisan இணையதளமான https://pmkisan.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம். மற்றொன்று அருகில் உள்ள பொது சேவை மையத்தை அணுகி பதிவு செய்யலாம்.

பதிவு செய்யும் முறை


https://pmkisan.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரிக்கு செல்ல வேண்டும். புதிதாக திறக்கும் பக்கத்தில் ‘FARMER CORNERS’ என்ற விருப்ப தேர்வு தெரியும். ‘NEW FARMER REGISTRATION என்பதை தேர்வு செய்து அதை சொடுக்க வேண்டும். அடுத்து திறக்கும் பக்கத்தில் ஆதார் அட்டை எண் மற்றம் Capcha போன்ற விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும். அடுத்து continue என்பதை சொடுக்க வேண்டும். பெயர், செல்போன் ண், வங்கி, நிலம் தொடர்பான விவரங்கள், தேவையான விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். இறுதியாக save செய்து விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
ஒரு பதிவு எண் மற்றும் தொடர்பு எண் ஆகியவை உருவாக்கப்படும். இந்த எண்களை எதிர்கால தொடர்புகளுக்காக பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.


கொரோனா தொற்று காரணமாக நாடெங்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் ரூ.18 ஆயிரம் கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளதாகத் தெரிகிறது. தற்போதைய நெருக்கடியை சமாளிக்க விவசாயிகளுக்கு உதவுவதே இதன் நோக்கம்.
இத்திட்டம் தொடர்பான உதவிக்கு 155261 அல்லது 1800115526 (கட்டணமில்லா) என்ற எண்ணை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.

நேரடியாக இணையதளத்துக்கு செல்லும் முகவரி…

https://pmkisan.gov.in

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.