விரைவில் பொது போக்குவரத்து- நிதின் கட்காரி


புதுதில்லி: நாட்டில் விரைவில் பொது போக்குவரத்துத் தொடங்கப்படும் என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் இறுதி வாரத்தில் இருந்து ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. அதுமுதல் பொது போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.


இந்நிலையில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, சில வழிகாட்டுதல் நெறிமுறைகளுடன் விரைவில் பொது போக்குவரத்து தொடங்கப்படும் என புதன்கிழமை தெரிவித்தார்.
காணொலிக் காட்சி வழியாக பஸ் மற்றும் கார் இயக்குவோர் கூட்டமைப்பின் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது இதை அவர் தெரிவித்துள்ளார்.


பேருந்துகள் மற்றும் கார்களை இயக்கும் போது சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், கை கழுவுதல், சுத்திகரிப்பு மற்றும் முககவசம் போன்ற அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் பின்பற்ற அறிவுறுத்தப்படும் என்றார்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.