விபத்தில் மரணமடைந்த தலைமைக் காவலர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி


முதல்வர் அறிவிப்பு

சென்னை: கிருஷ்ணகிரி அருகே கொரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணியில் இருந்த தலைமைக் காவலர் சேட்டு மீது லாரி மோதியதில் அவர் உயிரிழந்தார்.
இந்நிலையில் அவரது குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழக-கர்நாடக எல்லையான ஜூஜூவாடி சோதனைச்சாவடியில் பணியில் இருந்த தலைமைக்காவலர் சேட்டு லாரி மோதியதில் உயிரிழந்தார். அதையடுத்து இந்த அறிவிப்பை முதல்வர் வெளியிட்டார்.
அத்துடன் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப்பணி வழங்கப்படும் எனவும் முதல்வர் அறிவித்துள்ளார். .

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.