விபத்தில் உயிரிழந்த புலம்பெயர் தொழிலாளர்கள் 14 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு

உத்தரபிரதேச முதல்வர் அறிவிப்பு

புனே: இருவேறு விபத்துகளில் உயிரிழந்த 14 புலம்பெயர் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.


கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கி நாடு முழுவதும் கடந்த மார்ச் இறுதி வாரம் முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் பிழைப்புக்காக மாநிலம் விட்டு மாநிலம் சென்ற புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் ஊருக்கு திரும்பி வருகின்றனர்.


போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டுள்ள நிலையிலும், அரசு ஏற்பாடு செய்துள்ள ரயில்களில் திரும்பவதற்கு காலதாமதம் ஆவது, முறையான அடையாள அட்டை இல்லாமை போன்ற காரணங்களால் பலர் நடந்தே தங்கள் ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர்.
இதேபோல், உத்தர பிரதேச தொழிலாளர்கள் சிலர் மகாராஷ்டிரத்தில் இருந்து லாரி ஒன்றில் பயணம் செய்து சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். புதன்கிழமை மத்திய பிரதேசத்தின் குணா என்ற பகுதியில் வந்தபொழுது, அவர்களது லாரி எதிரே வந்த பேருந்து ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 8 பேர் பலியாகினர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அதேபோன்று மற்றொரு சம்பவத்தில், பஞ்சாபில் இருந்து பிகாரிலுள்ள சொந்த ஊருக்கு புலம்பெயர் தொழிலாளர்கள் உத்தர பிரதேசத்தின் முசாபர் நகரில் நெடுஞ்சாலையில் நடந்து சென்றபோது, அவர்கள் மீது அரசுப் பேருந்து ஒன்று புதன்கிழமை இரவு மோதியது. இதில் 6 பேர் பலியாகினர்.


இதையடுத்து, விபத்தில் பலியான 14 புலம்பெயர் தொழிலாளர்களின் உறவினர்களுக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.