வாழும் கலை அமைப்பை உருவாக்கிய ஸ்ரீஸ்ரீரவிசங்கர் குருஜி பிறந்த நாள்

1648 – டில்லியில் செங்கோட்டை கட்டி முடிக்கப்பட்டது.
1787 – ஆஸ்திரேலியாவில் குடியேற்றத்தை தொடங்க 11 கப்பல்களில் 772 சிறைக்கைதிகளையும் குற்றவாளிகளையும் ஏற்றிக் கொண்டு கேப்டன் ஆர்தர் பிலிப் இங்கிலாந்தை விட்டுப் புறப்பட்டார்.
1830 – எக்குவாடோர் விடுதலை அடைந்தது.
1846 – ஐக்கிய அமெரிக்கா மெக்சிக்கோ மீது போரை அறிவித்தது.
1880 – நியூ ஜேர்சியில் மென்லோ பூங்காவில் எடிசன் மின்சாரத்தில் இயங்கும் தனது முதலாவது தொடருந்தை பரிசோதித்தார்.
1888 – பிரேசில் அடிமைமுறையை
ஒழித்தது.
1913 – நான்கு இயந்திரங்களினால் ஆன முதலாவது விமானத்தை ஈகர் சிபோர்ஸ்கி என்ற ரஷ்யர் இயக்கினார்.
1940 – இரண்டாம் உலகப் போர்: நெதர்லாந்தினுள் நாசி ஜெர்மனியர் புகுந்ததை அடுத்து அதன் அரசி வில்ஹெல்மேனியா பிரித்தானியாவுக்கும், இளவரசி ஜூலியானா தனது குழந்தைகளுடன் கனடாவுக்கும் தப்பி ஓடினர்.
1943 – இரண்டாம் உலகப் போர்: வட ஆப்பிரிக்காவில் ஜெர்மனிய மற்றும் இத்தாலியப் படையினர் கூட்டுப் படைகளிடம் சரணடைந்தனர்.
1952 – இந்தியப் பாராளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையின் முதலாவது அமர்வு இடம்பெற்றது.
1954 – சிங்கப்பூரில் தேசியத்துக்கு எதிராக சீனப் பாடசாலை மாணவர்களின் போராட்டம் இடம்பெற்றது.
1960 – உலகின் ஏழாவது உயர மலையான தவுளகிரியின் உச்சியை சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த இருவர் முதன் முதலில் அடைந்தனர்.
1967 – ஜாகிர் உசேன் இந்தியாவின் முதலாவது முஸ்லிம் குடியரசுத் தலைவர் ஆனார்.
1969 – மலேசியாவில் கோலாலம்பூரில் சீனர்களுக்கும் மலே இனத்தவர்களுக்கும் இடையில் இனக்கலவரம் மூண்டது. 190 பேர் கொல்லப்பட்டனர்.
1981 – ரோமில் திருத்தந்தை இரண்டாவது ஜான் பாலைக் கொலை செய்ய எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்தது.
1989 – சீனாவில் தியனன்மென் சதுக்கத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் உண்ணாநோன்புப் போராட்டத்தைத் தொடங்கினர்.
1996 – வங்காள தேசத்தில் வீசிய கடும் புயலில் சிக்கி 600 பேர் இறந்தனர்.
1997 – இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையை தொடங்கினர்.
1998 – இந்தியா மேலும் இரண்டு அணுகுண்டுச் சோதனைகளை மேற்கொண்டது. இந்தியா மீது ஐக்கிய அமெரிக்காவும், ஜப்பானும் பொருளாதாரத் தடையை விதித்தன.
2005 – உஸ்பெக்கிஸ்தானில் அண்டிஜான் என்ற இடத்தில் காவல்துறையினர் போராட்டக்காரர்கள் மீது சுட்டதில் 187 பேர் கொல்லப்பட்டனர்.
2006 – திமுக தலைவர் மு. கருணாநிதி 5-ஆவது முறையாக தமிழக முதல்வர் பதவியை ஏற்றார்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.