வனுவாட்டு விடுதலை நாள்
வனுவாட்டு நாடு பசிபிக் பெருங்கடலின் தெற்கே ஓசியானியாப் பகுதியில் அமைந்துள்ள ஒரு தீவு நாடாகும். எரிமலைகள் அதிகம் கொண்ட இத்தீவு கூட்டம் ஆஸ்திரேலியாவுக்கு கிழக்கே சுமார் 1,750 கி.மீ்ட்டர் தூரத்திலும், நியூ கலிடோனியாவுக்கு 500 கி.மீ. வடகிழக்கிலும், சாலமன் தீவுகளுக்கு தெற்கேயும் அமைந்துள்ளது.
இங்கு மெலனீசிய மக்கள் வாழ்ந்தனர். 1606-இல் போர்த்துகீச மாலுமி பெர்னான்டஸ் டி குயிராஸ் தலைமையில் ஸ்பானிஷ் கப்பல் இங்கு முதன் முதலில் எஸ்பிரித் சான்டோ என்ற தீவில் தரையிறங்கியது. இத்தீவு கூட்டத்தை ஸ்பானிஷ் கிழக்கிந்தியாவின் ஒரு பகுதியாக அறிவித்து இதற்கு ஆஸ்திரேலியா டல் எஸ்பிரித்து சான்டோ எனப் பெயரிட்டார். 1880-களில் பிரான்சும், ஐக்கிய ராச்சியமும் இத்தீவுக் கூட்டத்தின் ஒரு பகுதியை தமது பகுதிகளாக அறிவித்தன. 1906-இல் இத்தீவுக்கூட்டத்தை பிரித்தானிய-பிரெஞ்சு கூட்டுரிமை மூலம் நியூ எபிரைட்ஸ் என்ற பெயரில் நிர்வகிக்க உடன்பட்டன. 1970-களில் நாட்டில் விடுதலைக்கான இயக்கம் வலுப்பெற்று 1980-இல் இத்தீவு கூட்டம் வனுவாட்டு குடியரசு என்ற பெயரில் விடுதலை அடைந்தது
சிறப்பு நாள்
வனுவாட்டு – விடுதலை நாள் (1980)
பிற நிகழ்வுகள்
1629 – இத்தாலி நேப்பில்சில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 10,000 பேர் உயிரிழந்தனர்.
1756 – ரஷ்யாவின் அரசி எலிசபெத்தின் வேண்டுதலுக்கிணங்க கட்டடக் கலைஞர் பார்த்தலோமியோ ராஸ்ட்ரெல்லி கத்தரீன் அரண்மனையைக் கட்டி முடித்தார்.
1825 – பசிபிக் கடலில் மால்டன் தீவு கண்டுபிடிக்கப்பட்டது.
1930 – உருகுவே முதலாவது கால்பந்தாட்ட உலகக் கோப்பை போட்டி இறுதி ஆட்டத்தில் ஆர்ஜெண்டீனாவை 4-2 கணக்கில் தோற்கடித்து உலகக் கோப்பையை வென்றது.
1932 – கலிபோர்னியாவில் 10-ஆவது ஒலிம்பிக் விளையாட்டுக்கள் தொடங்கின.
1945 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பானிய நீர்மூழ்கிக் கப்பல் I-58 அமெரிக்காவின் கடற்படைக் கப்பலை மூழ்கடித்ததில் 883 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.
1954 – எல்விஸ் பிரீஸ்லி முதல்தடவையாக பொது மேடையில் பாடத் தொடங்கினார்.
1966 – கால் பந்தாட்ட உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி மேற்கு ஜெர்மனியை 4-2 என்ற கணக்கில் வென்றது.
1971 – அப்பல்லோ 15-இல் சென்ற டேவிட் ஸ்காட் மற்றும் ஜேம்ஸ் ஏர்வின் இருவரும் லூனார் ரோவர் வாகனத்துடன் சந்திரனில் இறங்கினர்.
1971 – ஜப்பானில் இரண்டு விமானங்கள் வானில் மோதிக் கொண்டதில் 162 பேர் கொல்லப்பட்டனர்.
1980 – பிரான்ஸ், மற்றும் ஐக்கிய ராச்சியம் ஆகியவற்றிடம் இருந்து வனுவாட்டு விடுதலை பெற்றது.
1997 – ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் “திரெட்போ” என்ற இடம்பெற்ற மண்சரிவில் 18 பேர் கொல்லப்பட்டனர்.
You must log in to post a comment.