வடிவேலுவின் கொரோனா விழிப்புணர்வு விடியோ

சென்னை: கொரோனா குறித்த விழிப்புணர்வை தொடர்ந்து நடிகர் வடிவேலு விடியோ பதிவுகள் மூலம் பகிர்ந்து வருகிறார். அவ்வகையில் அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பது;

https://twitter.com/i/status/1253352538407043073


“இது உண்மையாவே போர் தான் நடந்துட்டு இருக்கு. எவன் பாத்த வேலையோ, கட்டடம், வீடு எல்லாம் அப்படியே இருக்கு. உயிர் மட்டும் சாகணுமாம். இதுல இருந்து தப்பிக்கணும். உலக நாடுகள் பூரா, இந்த குண்டெல்லாம் புதைச்சிடனும். இனி அதெல்லாம் தேவையில்லை. மனித நேயம் வளரணும். மருத்துவ உலகம் தழைச்சிங்கி நிக்கணும். டாக்டர்களெல்லாம் கடவுள்.
இப்ப வீட்டத் தாண்டி எவனும் வரக் கூடாதுன்னு சொல்லிட்டாங்க. அது கோடு, இது வீடு. இந்த ரோட்ட தாண்டியும் வரக் கூடாதுன்னு சொல்லிட்டாங்க. ரோட்டத் தாண்டியும் வரக் கூடாது, வீட்ட தாண்டியும் வரக் கூடாது, கோட்ட தாண்டியும் வரக் கூடாது.
போச்சா.. போச்சா… போச்சா… எவ்ளோ சொன்னாலும் பய புள்ளைங்க கேக்க மாட்டேங்குதுங்க. இப்ப கிடைக்குற பாடம் புள்ளைங்க காலத்துக்கும் மனசுல நிக்கும். நமக்கும் பிள்ளைங்கள வளர்க்க நல்ல சந்தர்ப்பம். வெளில போகக் கூடாதுப்பா, யாருக்கும் முத்தம் கொடுக்கக் கூடாதுப்பா, யார் முத்தம் கொடுத்தாலும் வாங்க கூடாதுப்பான்னு பிள்ளைங்களுக்கு சொல்லிக் கொடுக்கணும். நாளைக்கு பிள்ளைங்க, டாக்டரானாலும், நாட்டையே ஆண்டாலும் இது அவங்களுக்கு ஒரு படிப்பினை. அதனால இந்த சரியான சந்தர்ப்பத்தை, பயன்படுத்தி பிள்ளைங்கள நல்லபடியா வளர்த்துடனும்” என கூறியுள்ளார் வடிவேலு.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.