வடஇந்தியாவில் காற்று மாசு பெருமளவு குறைந்துள்ளது

நாசா தகவல்


வாஷிங்டன்: வடஇந்தியப் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு காற்று மாசு குறைந்துள்ளதாக நாசா தகவல் வெளியிட்டுள்ளது.
கொரோனா தொற்றை அடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த ஏப்ரல் 24 முதல் தொடர்ந்து அமலில் உள்ளது. இதனால் போக்குவரத்து வாகனங்கள் பெருமளவு இயங்கவில்லை. பெரிய தொழிற்சாலைகளும் இயங்கவில்லை. இதனால் காற்று மாசுபடுவது மிகக் குறைந்து வருகிறது.
இதுதொடர்பான ஆய்வை மேற்கொண்ட நாசா, செயற்கைக்கோள் தகவல்களின்படி வடஇந்தியப் பகுதியில் காற்று மாசு கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
நாசாவின் மார்ஷல் விண்வெளி ஆய்வு மையத்தின் பல்கலைக்கழக விண்வெளி ஆராய்ச்சி சங்க விஞ்ஞானி பவன் குப்தா கூறியது:
ஊரடங்கின் போது பல இடங்களில் வளிமண்டல அமைப்பில் மாற்றங்களைக் காண்போம் என்று எங்களுக்குத் தெரியும். இருப்பினும் இவ்வாண்டு இந்தோ-கங்கை சமவெளியில் இவ்வளவு குறைவான காற்று மாசை நான் பார்த்ததில்லை. ஊரடங்கின் முதல் வாரத்தில் ஏரோசல் குறைவதை நாங்கள் கண்டோம் எனத் தெரிவித்துள்ளார்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.