லிபியாவில் சிரியா கிளர்ச்சியாளர்கள் 7 பேர் படுகொலை
லிபியா: லிபியாவில் கலீபா ஹப்தர் தலைமையிலான ராணுவ ஆட்சியை எதிர்த்து சிரியா நாட்டு கிளர்ச்சியாளர்கள் போரிட்டு வருகின்றனர். இந்நிலையில் அவர்கள
கிளர்ச்சியாளர்கள் துருக்கி நாட்டு கண்காணிப்பின் கீழ் அந்நாட்டு எல்லை வழியே லிபியாவை அடைகின்றனர். போருக்கு செல்ல கிளர்ச்சியாளர்களுக்கு துருக்கி ஒப்பந்த அடிப்படையில் ஊதியம் வழங்கி ஊக்குவிக்கிறது.
இந்த நிலையில், இங்கிலாந்து நாட்டை அடிப்படையாக கொண்ட சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், லிபியாவில் நடந்து வரும் போரில் இதுவரை சிரியா நாட்டை சேர்ந்த கிளர்ச்சியாளர்கள் 318 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். பலர் சிறை பிடிக்கப்பட்டு உள்ளனர்.
லிபியாவில் நேற்று நடந்த போரில் சிரியா நாட்டு கிளர்ச்சியாளர்கள் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளது.
You must log in to post a comment.