ரிலையன்ஸ் ஜியோவின் 9.99 சதவீத பங்குகளை வாங்கியது ஃபேஸ்புக்


சமூகவலைதளங்களில் முன்னணியில் உள்ள பேஸ்புக் நிறுவனம், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஒரு அங்கமான ஜியோவின் 9.99 சதவீத பங்குகளை, ரூ. 43,574 கோடிக்கு (அமெரிக்க டாலர்கள் மதிப்பில் 5.7 பில்லியன்) வாங்கியுள்ளது.
இது உலகில் எங்கும் ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தால் சிறுபான்மை பங்குகளுக்கான மிகப்பெரிய முதலீடு என்றும், இந்தியாவில் தொழில்நுட்ப துறையில் மிகப்பெரிய அந்நிய நேரடி முதலீடு என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், இந்திய தொலைதொடர்பு துறையில், பேஸ்புக் நிறுவனம் காலடி எடுத்து வைத்துள்ளது.
பேஸ்புக் – ஜியோ இடையயோன இந்த ஒப்பந்தத்தால் ஜியோ நிறுவனத்தின் மதிப்பு 65.95 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
இந்த ஒப்பந்தம் தொடர்பாக, பேஸ்புக் நிறுவனம் மார்க் சூக்கர்பெர்க் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது:
இந்த முதலீடு தொடர்பான ஒப்பந்தத்தின் மூலம், இந்தியாவில், இந்த இரு நிறுவனங்களும் முக்கிய தொலைதொடர்பு மற்றும் வர்த்தக திட்டங்களில் இணைந்து பணியாற்ற முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
பேஸ்புக் நிறுவன தலைமை வருவாய் அலுவலர் டேவிட் பிஷ்சர் மற்றும் பேஸ்புக் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அஜித் மோகன் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்த ஒப்பந்தம் மூலம், இந்தியாவில் ஜியோ சேவைகள் மேலும் விரிவுபடுத்தப்படும். அடுத்த 4 ஆண்டுகளுக்குள், ஜியோ ஆன்லைன் சேவையில் மேலும் கூடுதலாக 388 மில்லியன் மக்கள் இணைவர். மக்களின் புதுமையான கிரியேட்டிவ் உத்திகளுடன் தங்களது வர்த்தகத்தை அவர்கள் விரிவுபடுத்திக்கொள்ள ஜியோ சேவைகள் துணை நிற்கும்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி கூறியதாவது:
இந்தியாவில் டிஜிட்டல் சேவைகள் மேம்பாடு அடையவும், நாட்டு மக்கள் பலன்பெறவும், எங்களது இந்த ஒப்பந்தம் வழிவகை செய்துள்ளது. உலகமே, கொரோனா பீதியில் உறைந்துள்ள நிலையில், இந்த பேரிடருக்கு பிறகு இந்தியாவின் பொருளாதாரம் விரைவில் மேம்பாடு அடைய இந்த ஒப்பந்தம் துணைபுரியும்.
288 பில்லியன் மக்கள் புதிதாக ஜியோ சேவையில் இணைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேஸ்புக் நிறுவனம் கிராமப்பகுதிகளில் விலையில்லா இணையதள வசதியை, வைஃபை உதவியுடன் வழங்கிவருவதால், பல்லாயிரக்கணக்கானோர் டிஜிட்டல் யுகத்தில் தங்களை இணைத்துக்கொள்ள வழிவகை ஏற்பட்டுள்ளது. டிஜிட்டல் தயாரிப்புகளின் நுகர்வையும் அவர்கள் பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உள்ள எல்லா வர்த்தங்களிலும் புதிய வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதே எங்களது குறிக்கோள். தற்போது கொரோனா தொற்று பரவல் நிகழ்ந்து வரும் நிலையில், மக்களுக்கும், அவர்கள் சார்ந்த தொழில்கள் வளர்ச்சி பெறவும் தங்களது இந்த ஒப்பந்தம் உதவும் என்று பேஸ்புக் தெரிவித்துள்ளது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.