ராஜீவ் காந்தி பிறந்த நாள்

மறைந்த பாரத பிரதமர் இந்திரா காந்தியின் மகனான ராஜீவ்காந்தி 1944 ஆகஸ்ட் 20-இல் பிறந்தவர். இந்தியாவின் புகழ்பெற்ற அரசியல் குடும்பத்தில் பிறந்தும், அரசியல் மீது ஆர்வமில்லாது,  விமானம் ஓட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். தாயார் இந்திரா காந்தியால் வாரிசாக வளர்க்கப்பட்டு வந்தவரெனக் கருதப்பட்ட அவரது இளைய சகோதரர் சஞ்சய் காந்தி விமான விபத்து ஒன்றில் காலமானார். அதைத் தொடர்ந்து மிகுந்த வற்புறுத்தலை அடுத்து அரசியலுக்கு ராஜீவ்காந்தி வந்தார். 1981 பிப்ரவரியில் சஞ்சய் காந்தியின் தொகுதியான உத்தரப் பிரதேசத்தில் உள்ள அமெதித் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தாயார் பிரதமர் இந்திரா காந்தி 1984 அக்டோபர் 31-இல் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து பிரதமரானார். இந்திய அமைதி காக்கும் படையை இலங்கைக்கு அனுப்பி தமிழர்களுக்கு கூட்டாட்சி முறையிலான உரிமையைப் பெற்றுத் தர முயன்றார். 21 மே 1991-இல் ஸ்ரீபெரும்புதூரில் தற்கொலைப் படையினரால் வெடிகுண்டு மூலம் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டார்.

பிற நிகழ்வுகள்

636 – அரபுப் படைகள் பைசண்டைன் பேரரசிடம் இருந்து சிரியா, பாலஸ்தீனம் ஆகியவற்றைக் கைப்பற்றினர்.
1000 – ஹங்கேரி நாடு முதலாம் ஸ்டீபன் என்பவனால் உருவாக்கப்பட்டது.
1866 – அமெரிக்க அதிபர் ஆண்ட்ரூ ஜான்சன் அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததாக அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
1914 – முதலாம் உலகப் போர்: பெல்ஜியத்தின் தலைநகர் பிரசெல்சை ஜெர்மனியப் படைகள் கைப்பற்றின.
1917 – இலங்கையில் ஒரு ரூபாய்த் தாள் வழங்கப்பட்டது.
1940 – மெக்சிக்கோவில் இடம்பெற்ற கொலை முயற்சி ஒன்றில் ரஷ்யப் புரட்சியாளர் லியோன் ட்ரொட்ஸ்கி படுகாயமுற்று அடுத்த நாள் மரணமானார்.
1944 – இரண்டாம் உலகப் போர்: ருமேனியா மீது சோவியத் ஒன்றியம் தாக்குதலை ஆரம்பித்தது.
1948 – “இலங்கை குடியுரிமை சட்டம்” இலங்கை நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் 10 இலட்சம் இலங்கைத் தோட்டத் தொழிலாளர்களான இந்திய வம்சாவளித் தமிழர்கள் நாடற்றவர்கள் ஆக்கப்பட்டனர்.
1953 – ஹைட்ரஜன் குண்டைத் தாம் சோதித்ததாக சோவியத் ஒன்றியம் அறிவித்தது.
1960 – செனெகல் மாலிக் கூட்டமைப்பில் இருந்து விலகி தனி நாடாக அறிவித்தது.
1968 – பனிப்போர்: 200,000 வார்சா ஒப்பந்த நாடுகளின் படைகள் செக்கோஸ்லவாக்கியாவினுள் புகுந்தன.
1975 – நாசா வைக்கிங் 1 விண்கலத்தை செவ்வாயை நோக்கி ஏவியது.
1977 – நாசா வொயேஜர் 2 விண்கலத்தை ஏவியது.
1988 – ஈரான் – ஈராக் போர்: 8 ஆண்டுகள் போரின் பின்னர் போர் நிறுத்தம் உடன்பாடாகியது.
1991 – எஸ்தோனியா சோவியத் ஒன்றியத்தில் இருந்து விலகி மீண்டும் தனி நாடாகியது.
1997 – அல்ஜீரியாவில் 60 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.